இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் Sri Lanka National Novices Chess Championship-2022 போட்டி
கடந்த 14,15 ஆம் திகதிகளில் இரண்டு நாட்களாக நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இலங்கை சதுரங்க சம்மேளன பிரதிநிதியாக எ.எம்.ஸாகீர் அஹமட் அவர்களின் ஒழுங்கமைப்பில், இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தலா ஐந்து போட்டிகள் வீதம் நடாத்தப்பட்ட இப்போட்டி தொடரில் மூன்று பிரதான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், 15 போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி தொடரின் சம்பியனாக DMNK.திஸ்ஸாநாயக தெரிவுசெய்யப்பட்டார், இரண்டாவது வெற்றியாளராக MJ.இஷ்ஸத் ஸஹ்மி அவர்களும், மூன்றாவது வெற்றியாளராக IKM.ஆகில் ஹான் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment