நான் அமைச்சராக இருக்கும் வரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையை தனியார் மயப்படுத்தமாட்டேன் -நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார



நீர் வழங்கல் சபையை தனியார் மயப்படுத்த விடமாட்டேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். நான் அமைச்சராக இருக்கும் வரை அது நடக்காது.எமது அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அது ஒருபோதும் நடக்காது என்பதே எனது நம்பிக்கையாகும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில்நுட்ப பயிலுனர்கள் 41 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

இன்றைய தினம் நியமனம் பெற்று எம்முடன் நீங்கள் இணைந்தமை நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் அத்தியாவசியமாகும்.அதேபோன்று உங்களது வாழ்க்கைக்கும் இந்நியமனம் ஙஅவசியமாகும். எமது வாழ்க்கை மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற இரண்டும் ஒன்றுதான். எமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவது எமது நாட்டின் எதிர்காலத்திற்கு உதவுவதாகும். அது எமது வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதாகும். இதனை மனதில் வைத்து கடமைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையே நான் சுட்டிக்காட்டினேன்.
நீங்கள் அனைவரும் தொழிற்துறை வாழ்க்கைக்கு பிரவேசிப்பதற்கான நுழைவு வாயிலுக்கு முன் உள்ளீர்கள்.இந்த ஜேர்மன் தொழில்நுட்ப திறமையை உலகமே அங்கீகரிக்கும்.தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் உலகிற்கு எதிர்காலம் இல்லை.மனித இனத்திற்கும் எதிர்காலமில்லை. தொழில்நுட்ப ஞானத்தின் வருகையின் ஊடாக நாம் பரிணாமம் அடைந்து வளர்ச்சி பாதைக்கு வந்துள்ளோம். எனவே அந்த திறமையை கொண்ட நீங்கள் பாரியதொரு பொறுப்பை பொறுப்பேற்கின்றீர்கள். இராணுவத்தின் முன்கள படையணி போன்று தேசிய தேவைக்காக அர்ப்பணிப்பவர்கள் என்ற வகையில் உங்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
நாம் அனைவரும் சகோதரத்துவத்துடனும் சமத்துவதுடனும் வாழ்வதற்கான கலாச்சாரத்தை கட்டியெழுப்பி வருகிறோம். நாம் சமத்துவத்துடன் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் என அழைத்து கொள்றோம்.தராதரம் பாராமல் சமத்துவத்துடன் வரவேற்கிறோம். இதன்பிரகாரம் நாம் வாழ்வதற்கு முயற்சிக்கிறோம். நான் இது தொடர்பில் என்னுடைய பணிகளை முன்னெடுத்து வருகிறேன். இதன்படி நீங்கள் தொழிற்சங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு வேறு அரசியல் கொள்கையை கடைபிடிக்க உங்களுக்கு உரிமையுண்டு.
இளைஞர்கள் என்ற வகையில் தொழில் ரீதியாக சமமான நிலைப்பாடு இருக்க வேண்டும். அது அரசியலுக்கு பொருந்தாது. அது உங்களின் சுதந்திரமாகும். எனினும் அது தனது தொழிலுக்கு அப்பாற்பட்ட பணியாகும். தமது தொழில் கடமைகளையும் அரசியலையும் குழப்பிக்கொள்ள கூடாது. தொழில் ரீதியான கடமைகளை நிறைவேற்றிய பின்னர் தமக்கு விருப்பமான முறையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட முடியும்.அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு அமைச்சரின் அரசியல் நடவடிக்கைகளில் மாத்திரம்தான் ஈடுப்பட வேண்டும் என சட்டம் எதுவுமில்லை. நாம் பூரண சுதந்திர சமூகம் உலகில் உருவாகுவதை காண ஆவலாக இருப்பவர்களாகும்.சமூகத்திலுள்ள அனைவரையும் திறமையில் பூர்த்தியானவர்களாக மாற்றி குறித்த திறமையை சமூக நலனுக்காக பிரயோகித்து எதிர்கால உலகை கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கு உள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :