பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்கள், தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி போராட்டம்



பி.எஸ்.ஐ.கனி-
10 ஆண்டுகள் சிறையில் கழித்த முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்கள் உள்பட ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மண்டலம் சார்பில் ஜனநாயக சக்திகள் பங்கேற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மதுரையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்!

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர்
வன்னி அரசு, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது,
எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் அபூபக்கர் சித்தீக், நஜ்மா பேகம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்கள். இறுதியாக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜியாவுதீன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது, பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடக்கூடிய 38 முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்களை விடுவிக்கும் அதிகாரம் தமிழக முதல்வர் கையில் தான் இருக்கிறது .நீதிமன்றத்தின் கைகளில் இல்லை. எனவே தமிழக முதல்வர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கக் கூடாது.குற்றவாளிகளை தான் பார்க்க வேண்டும். குற்றத்தை பார்க்க கூடாது. சிறைவாசிகள் விஷயத்தில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அரசாணை எங்களின் உள்ளத்தை கிழித்து தொங்கப் போட்டு விட்டது. கருணை, பொது மன்னிப்பு விவகாரத்தில் பாரபட்சம் காட்டக் கூடாது. .

முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகள் இருந்தாலும் , தற்போது முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கும் ஒற்றை கோரிக்கையை மட்டுமே நாங்கள் முன்வைக்கிறோம். ஆயுள் சிறைக் கைதிகள் என்று சொன்னால் அவர்கள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்ல அவர்களும் நம் நாட்டின் குடிமக்கள் என்பதை புரிந்து கொண்டு, தமிழக முதல்வர் அவர்களை விடுவிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :