கலாநிதி சந்திமா விஜயகுணவா்த்தனவினால் ” சததிய ஸ்ரீலங்கா - இலங்கை மனித நேய அமைப்பொன்றினை சனிக்கிழமை (29.01.2022) பண்டார நாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஊடக அமைச்சா் டலகஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.. இந் நிகழ்வில் சவுதி அரேபியா, பலஸ்தீன், பாக்கிஸ்தான் , மாலைதீவு ஆகிய நாடுகளின் துாதுவா்கள் மற்றும் துாதரக அதிகாரிகளும் சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளா்களும் பலரும் கலந்து கொண்டனா்.
ஊடகவியலாளர் சமித்துதித்த தலைமையில் கலாநிதி சந்திமா விஜயகுணவா்த்தன, கலாநிதி செயினுடீன் நஜிமுதீன், வைத்தியா் சமல் சஞ்சீவ, பொறியியலாளா் அனுராத தென்னக்கோன், வணிக கலாநிதி இசுரு பண்டார ஆகியோா் இணைந்து ”இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள், நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது சம்பந்தமானதொரு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இலங்கை ஓர் அழகான தீவு இந்த நாட்டினை நேசிப்பதற்கு உலகில் பல மானிட வா்க்கம் உள்ளது. எமது இயற்கையான காலநிலைகள், இயற்கை வளங்கள் கடல், வாவிகள், இயற்கை நீர், மணல் ,மலைகள் காடுகள் சாா்ந்த இயற்கை நாடாகும். இங்கு பல்லின சமூகங்கள் சகோதரத்துவடன் சமாதானமாக வாழ்கின்றனா்.
இந்த மாநாட்டின் அறைக்குள் 7 தலைவா்களது நிழற்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. அதில மக்தமா காந்தி, நெல்சன் மண்டேலா. யசீர் அரபாத், இம்ரான் கான், டொக்டா் மஹதீா் மஹூமூத் என தனது சொந்த நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்து தனது நாட்டினை எதிா் கால சமூகத்திற்காக கட்டி எழுப்பிய தலைவா்களாகும். நமது நாட்டினை . கடந்த 73 வருடங்களாக ஆட்சி செய்த எந்த அரச தலைவா்கள் நிழற்படங்கள் ஏன் இங்கு தொங்கவிடப்படுவதற்கு அவ்வாறு எவரும் எங்களுக்கு தென்படவில்லை .என கலாநிதி சந்திமா விஜயகுணவா்த்தன கருதது தெரிவித்தாா்.
இந்த நாட்டினை அபிவிருத்தி கன்டதொரு நாடாக நாம் கட்டியெழுப்ப முடியும். அதற்காக இந்தப் பூமியில் பல புத்திஜீவிகள் உள்ளனா். நமது நாட்டிற்கு வெளிநாட்டு கடன் இல்லாமலும் விவசாயத்திலும், சுற்றுலத்துறையிலும்,கல்வி,த்துறையிலும் வணிகத்துறையில் நமது நாட்டினைக் கட்டியெழுப்பமுடியும். நாம் வெளிநாட்டுக்கு நமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து தன்னிரைவு காணமுடியும். நமது இளைஞா்கள், யுவதிகள் உயா்கல்விக்காக வெளிநாடு செல்லத்தேவையில்லை. நமது நாட்டிலேயே வெளிநாட்டு மாணவா்கள் இங்க வந்து கற்கக் கூடிய சகல வசதிகளும் உள்ளன. நமது நாட்டினை கட்டியெழுப்பக் கூடிய ஒர் சிறந்த தலைமை இதுவரையும் நாம் அடையாலம் காண முடியவில்லையே என நாம் ஏக்கத்திலும் உள்ளோம்..
இந்த நாட்டில் வாழும் மக்கள் ஓழுக்கமுடையவா்கள் சகல சமூகங்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணா்ச்சியில் நமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தினை கட்டி வளா்கக் முடியும். ஆனால் அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் தமது சுயலாபத்திற்காக நாட்டினை வெளிநாட்டவா்களது டொலா்களுக்க தாரை வாக்கின்றனா். இனங்களை பிரித்து ஆளுகின்றனா். நாம் பயண்படுத்தும் உணவுப் பொருடகள் தொட்டு ஏனைய பொருட்களும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. என அங்கு கருத்தாளா்கள் கருததுக்களைத் தெரிவித்தனா்
மலேசியா பிரதமா் மஹதீர் மஹ்மூத் - தான் நோய்வாய்ப்பட்டதும் அவரை வெளிநாடு அல்லது,சிங்கப்பூருக்கு மருத்துவத்திற்கு அழைத்த போது அவர் அதனை மருத்தாா். எனது நாட்டில் வைத்தியத்துறைக்கு எனக்கே நம்பிக்கை இல்லவென்றால் எனது நாட்டின் மக்கள் இந்த நா்ட்டின் வைத்தியத்துறையில் நம்பிக்கை வைக்கமாட்டாா்கள். எனக் கூறி அவர் அந்த நாட்டிலேயே வைத்தியம் செய்தாா் .அந்த நாட்டின் வைத்தியத்துறை மேலோங்கி உள்ளது.
உலகில் அதி சிறந்த நாடாக துபாய் நாடு தண்னிரைவு கண்டுள்ளது. அங்கு நீர், வாவி வயல் இல்லாதொரு நாடாகும். அங்கு மலைகள் குனருகள் மட்டுமே உள்ளது. ஆனால் அங்கு தற்பொழுது 10 வீதமே பெற்றோல் உள்ளது. அவை அடுத்த 8 வருடங்களுக்குள் முடிவடைந்துவிடும் அதனை நினைத்து அந்த நாடடின் அரச தலைவா்கள“ அடுத்த 50 ஆண்டுகளுக்குள் சுற்றுலாத்துறை, வணிகத்துறையில் உலக வா்த்தக மையமாக அந்த நாட்டினை கட்டி எழுப்பியுள்ளாா். உலக நாடுகளில் உள்ள வா்த்தகா்கள் எல்லாரும் அங்கு முதலிட சா்ந்தர்ப்பம் கொடுத்துள்ளாா். அவா்கள் ஒருபோதும் அவா்களது வளங்களை அன்னிய நாட்டவருக்கு விற்க வில்லை.
சவுதிஅரேபியாவிற்கு பெண்கள் செல்வதென்றால் கருப்பிலான அபாயா உடை அணிந்து முகத்தினை மூடி செல்ல வேண்டிய கட்டாய கடமையிருந்தது தற்பொழுது அந்த நாடு அதனை விலக்கியுள்ளது எந்த உடை அணிந்தும் அந் நாட்டுக்கு பெண்கள் செல்லமுடியும்.
நாம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு நமது பெண்களை வீட்டு வேலைக்காகவும் இளைஞா்களை சாதாரண ஊழியா்கள் லேபர்களாகவே அனுப்பி நமது அன்னிய வெளிநாட்டு செலவாணியை சம்பாதிக்கின்றோம். இந் நிலைமை மாற்றமடைதல் வேண்டும். அதனை மாற்றக்கூடிய சிறந்த அரசியல் தலைமைகள் நம்மத்தியில் உருவாக வேண்டும் எனவும கருத்தாளா்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனா்.
0 comments :
Post a Comment