தென்கிழக்குப் பல்கலையில் கோழிப்பண்ணையாளர்களுக்கான செயலமர்வு!



சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்; அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களிலுள்ள கோழிப் பண்ணையாளர்களுக்கான கைத்தொழில் ரீதியிலான செயலமர்வு, 12 ஆம் திகதி பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெறவுள்ளதாக இச்செயலமர்வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக் தெரிவித்தார்.

பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் பிரிவின் துறைத் தலைவர் கலாநிதி ஏ.என்.எம். முபாறக் அவர்களின் வழிகாட்டலில் இவ்முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக் குறிப்பிட்டார்.

அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களில் கோழி உற்பத்தி செய்கின்ற பண்ணையாளர்களின் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர்பிலான ஆலேசனைகள், வழிகாட்டல்கள், உற்பத்தி தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கோழிப்பண்ணை தொடர்பான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தல், கோழிப் பண்ணையின் உற்பத்தித் திறணை அதிகரிக்கும் நோக்கில் தொழில்நுட்பம் சார்ந்த ஆலேசனைகளை வழங்குதல் போன்ற விடங்கள் தொடர்பாக இச்செயலமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது எனவும் கலாநிதி தாரீக் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :