அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட விளினையடி , செந்நெல் கிராமம் , இஸ்மாயில்புரம் , வளத்தாப்பிட்டி , மலையடிக்கிராமம் , மல்வத்த , மஜீட்புரம் ஆகிய கிராமங்களில் நிர் தேங்கி நிற்பதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வடிகான்களிலும் , வெற்று வளவுகளிலும் நீர்தேங்கி நிற்பதாலும் , வளவுகளில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவதாலும் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலையொன்று தோன்றியுள்ளது.
இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்போர் தமது வீடுகளில் கொட்டில் அமைத்து கால்நடைகளை பராமரிப்பதால் இவற்றின் கழிவுகளிலிருந்தும் நோய்கள் பரவக்கூடிய நிலமை உருவாகி வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் விழப்பாக இருப்பதோடு நீர் தேங்கி நிற்கும் இடங்களை துப்பரவு செய்து சுகாதாரமான நிலமையை பேணுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
0 comments :
Post a Comment