புல்லிபாய், சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விமன் இந்தியா மூவ்மென்ட் நெல்லை மாவட்ட செயற்குழு தீர்மானம்



பி.எஸ்.ஐ.கனி-
விமன் இந்தியா மூவ்மென்ட்( விம்) நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா தலைமை தாங்கினார், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா வரவேற்றார்,

இக்கூட்டத்தில், ஒமைக்ரான் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும், தெருக்களில் சுற்றி வரும் நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், புல்லிபாய், சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர்களை காவல்துறை கண்டறிந்து, அவர்களை ஒடுக்கத் தவறினால், குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் நூர் நிஷா நன்றி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் யாஸ்மின்,செயற்குழு உறுப்பினர்கள் பர்வீன் பானு, சுகராள்பானு ,அனீஸ் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :