இன்று திங்கட்கிழமை (10) பி.பகல் 04.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் மிகிலிலங்கா மதுர அரங்கில் ”மாற்றுமோதிரம்” மணமகள் வடிவலங்காரம் கண்காட்சி ஒன்று நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வுக்கு பிரதமரின் பாரியாா் சிரந்தி ராஜபக்ச அவா்கள் பிரதம அதிதியாகவும் மற்றும் அமைச்சா்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், அனுசரனையாளா்களும் கலந்து கொள்ளவுள்ளனா். என அருந்ததி தனியாா் நிறுவனத்தின் பணிப்பாளா் கே. மேகலா தெரிவித்தாா்.
நேற்றுமுன்தினம் (08) வெள்ளவத்தையில் உள்ள கிரீன்ஸ் பலஸ் ஹோட்டலில் மேற்படி நிகழ்வு சம்பந்தமாக ஊடகவியலாளா் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு கே. மேகலா தெரிவித்தார்.
.அவர் அங்கு தொடா்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த 2 வருட காலமாக கொவிட் 19 காரணமாக மணமகள் வடிவலங்கார சுயதொழில் கலைஞா்கள் அழகியற்துறை கண்காட்சி சாா்ந்த கலைஞர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனா். ,2017, 20218 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கண்காட்சிகளை எமது நிறுவனம் வருடா வருடம் நடாத்தி அதில் திறமையானவா்களுக்கு சிறந்த மணமகள் கலைஞர்களுக்கும் சான்றிதழ் விருதுகள் வழங்கி வந்தோம். கடந்த வருட கால கொவிட் 19 தொற்று காரணமாக இத்துறை சேர்ந்தவர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர முடியாமுல் போகிவிட்டது. ஆகவே இம்முறை தலைநகரில் 50 பேர் கொண்ட மணமகள் உடை அலங்காரம் நிகழ்வு மாற்று மோதிரம் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி திங்கட் கிழமை இன்று 10 .01.2022 பி.பகல் 04. மணிக்கு பி.எம். ஜ.சி.எச் ல் நடைபெறுகின்றது.
இந் நிகழ்வினை கொழும்பில் நடத்துவதன் நோக்கம் கொழும்பில் உள்ள அலங்கார வடிவமைப்பாளா்கள், ”பிரைட்டல் பெஸன் சோ” கலைஞா்கள் மற்றும் இத்துறைக்கான உடைகள் அலங்காரம். நகை அலங்கார வியாபார ஸ்தாபணத்தாா்களின் அனுசரனையாளா்களையும் இணைத்து இந் நிகழ்வினை நடாத்துகின்றோம் இதனால் எமக்கு மீண்டும் இத்துறைசாா்ந்தவா்களது சுயதொழில் முயற்சியில் ஊக்கமளித்து அவா்களை இத்துறையில் புத்துணா்ச்சியளிப்பதே எமது நிறுவனத்தின் நோக்கமாகும். இத்துறைக்கு ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்கள் உதவும் படியும் அவா் வேண்டிக் கொண்டாா். கொவிட் 19 சுகாதார வழிமுறை காரணமாக 200 பாா்வையாளா்களுக்கு மட்டுமே இலவசமாக அழைப்பிதழ்கள் அனுப்பியுள்ளோம். . என அங்கு மேகலா தெரிவித்தாா். இவ் ஊடக மாநாட்டில் தினகரன் பிரதம ஆசிரியா் ரீ.. செந்தில்வேலவா் மற்றும் பிரமுகர்கள் வரவேற்பு பிரநிதி ரீ. மனோகரனும் பிரதான மேடையில் பிரசன்னமாகியிருந்தனா்.
0 comments :
Post a Comment