மக்கள் புதுவருட கொண்டாட்டத்திலும் சமையல் எரிவாயு, பால்மா , அரிசி போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் நிலையில் அரசாங்கம் டிசம்பர் 31ம் திகதி இரவு 665 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கம் கடந்த வருடம் முழுவதும் 67,833 கோடி ரூபா பணத்தை அரசாங்கம் அச்சிட்டிருக்கிறது என முன்னாள் தென் மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நாட்டு மக்கள் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திலும் சமையல் எரிவாயு , அரிசி, பால்மா போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் 2021ம் ஆண்டின் இறுதித் தினமான 31ம் திகதி 665 கோடி ரூபாவை பணத்தை அச்சிட்டுள்ளது. இதன்படி அரசாங்கம் கடந்த வருடம் ஜனவரி 1ம் திகதியிலிருந்து டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருட காலத்தில் மொத்தமாக 67,833 கோடி ரூபா பணத்தை அச்சிட்டிருக்கின் றது.
இலங்கை மக்கள் காஸ், பால்மா, அரிசி வரிசைகளில் இருக்கும் நிலையில் வருடத்தின் இறுதி தினத்தில் 665 கோடி ரூபாவை அச்சிட்டிருக்கின்றது.
பணத்தை அச்சிடுவதற்கு ஒரு தினத்துக்கு முன்னர் $1.5 Billion நாட்டுக்கு வந்ததாக தெரிவித்து, எண் மந்திரம் ஒன்றை காட்டிய அரசாங்கம் மறுதினம் இவ்வாறு பணம் அச்சிடுவதால், அதிகரித்திருக்கும் பொருட்களின் விலை மேலும் பாரியளவில் அதிகரிக்கப்படும். அரசாங்கம் கடந்த வருடத்தில் மாத்திரம் 67, 833 கோடி ரூபா பணத்தை அச்சிட்டிருக்கின்றது.
இலங்கை வரலாற்றில் ஒருபோதும்இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதில்லை. அத்துடன் இன்று பண வீக்கம் என்பது இலக்கத்தில் மாத்திரமாகும். நாளொன்றுக்கு 2, 3 தடவைகள் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. அதற்காக அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை, அதனால் நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தே செல்கின்றது. இதற்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே தீர்வு பணத்தை அச்சிடுவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment