ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் எண்ணக்கருவில் உருவான "சௌபாக்ய தக்ம "நிகழ்ச்சி திட்டத்தினை அமுல்படுத்தும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கேனல் லலித்குமாரசிரி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாணத்தில் 5000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் 2022 புதுவருடத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண பதில் இணைப்பாளரும் தம்பலகாம பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய ஏ.ஏ.முஹ்சித் அவர்களின் தலைமையில் தம்பலகாம பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களின் பங்குபற்றுதலுடன் 10 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது.
தெரிவு செய்தப்பட்ட பகுதிகளில் இன்று (03) குறித்த மரக் கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இம் மரக் கன்றுகள் உரிய பகுதிகளில் இடம் பெற்றன. இதில் பல்நோக்கு அபிவிருத்தி ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment