கல்முனை பிரதேச செயலகத்தில் 2022ம் ஆண்டிற்கான கடமை நடவடிக்கைகளை ஆரம்பித்தல்



சர்ஜுன் லாபீர்,றாசிக் நாபயிஸ்-
புதிய ஆண்டின்(2022) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(03)காலை 8.58 மணிக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

மலரும் 2022 ஆம் ஆண்டில் சமூக , பொருளாதார எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ளும் ஒருமித்த எண்ணத்துடன் அனைத்து அரச ஊழியர்களும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்காலப் பரம்பரையினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது

மேலும் , 2020, 2021 ஆண்டுகளில் கொவிட் -19 தொற்றுநோயால் பின்னடைவுக்கு உள்ளான சமூக - பொருளாதார முன்னேற்றத்தை , 2022 இல் மீண்டும் ஏற்படுத்தி பலமான நாட்டை கட்டியெழுப்புவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் .

மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹிர்,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்
ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ்,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முக்கரப்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,நிர்வாக கிராம சேவை.உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல் ஜனூபா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(காணிப்பிரிவு) யூ.எல் ரமீஸ்,நிதி உதவியாளர் எம்.ஐ.ஏ ரகுமான் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :