மட்டு. அம்பாறை விஞ்ஞான ஒன்றியம் மற்றும் 15ம் கிராமம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த பரிசளிப்பு விழா நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
15ம் கிராமம் பொது நூலகத்தின் தலைவர் கே.துஷ்ஷந்தன் தலைமையில் மட்டு அம்பாறை விஞ்ஞான ஒன்றியத்தின் தலைவர் கே.கோபிநாத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ அ.ஆனந்தன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
விசேட அதிதிகளாக நாவிதன்வெளி இலங்கை வங்கி முகாமையாளர் கே.சசிதரன் ,வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் என்.பிரபாகர் ,7ம் கிராமம் நாமகள் வித்தியாலய அதிபர் எம்.இராஜகோபால் மற்றும் சண்முகா வித்தியாலய அதிபர் ஈ.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வாசிப்பு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற 33 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment