இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன் 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் மரணமடைந்த ஷுஹதாக்களின் நினைவாக கத்தமுல் குர்ஆன் நிகழ்வும் துஆப் பிரார்த்தனையும் ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணிக்கு ECM Group of company, மற்றும் நாபீர் பௌண்டேசன் நிறுவனங்களின் ஸ்தாபகர் பட்டயப் பொறியியலாளர் கலாநிதி அல் - ஹாஜ் உதுமான் கண்டு நாபீர் வழிகாட்டலின் கீழ், ECM நிறுவனத்தின் சம்மாந்துறைக் காரியாலயத்தில் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஓய்வு பெற்ற அதிபர் அல் ஹாஜ் ஏ.சீ.ஏ.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அல் - குர்ஆன் தமாம் செய்யப்பட்டதோடு, உலமாக்களின் பயான் நிகழ்வும், ஷுஹதாக்களின் மறுமை ஈடேற்றத்திற்காக துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment