ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த போஷாக்குமே உரித்தாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.



ட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த போஷாக்குமே உரித்தாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடிய நாடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,குறைந்த எடை கொண்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடு என்ற சாதனையை இலங்கை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் குறையை கேட்டறியும்'மனிதாபிமான சுற்றுலா'வின் நான்காம் நாள் விஜயத்தை இன்று(29) சூரியவெவ நகரில் ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச்சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன்
"குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு" என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை, சூரியவெவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான சுஹக பிரதீப் அவர்களின் சூரியவெவ ஐக்கிய இளைஞர் சக்தி அலுவலகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் மதவாதம், இனவாதம், பொய்களைக் கொண்டே வெற்றி பெற்றதாகவும்,ஒரு காட்போர்ட் தேசபக்தியை உருவாக்கி, சிங்கள பௌத்த சிந்தனைகள் கணக்கில் எடுக்கப்படாது, இனவாதத்தையும், மதவாதத்தையும், தீவிரவாதத்தையும், பொய்யையும் பரப்பியது இந்த அரசாங்கமே என்றும் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களில் அரசாங்கம் நம் நாட்டை கண்ணீரில் மூழ்கும் ஒர் சொர்க்கமாக மாற்றிவிட்டதாகவும்,மறுபுறம் இருண்ட சொர்க்கமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது மாத்திரமன்றி இன்று இந்த நாடு பஞ்சபூதமாகவும் தேசிய வள விற்பனை சொர்க்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வலையொளி இணைப்பு-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :