சுபீட்சத்தின் அபிவிருத்தி' திட்டத்தில் திவுலப்பிட்டியவில் கண் பார்வையற்ற 1000 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்.



மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டும் ' சுபீட்சத்தின் அபிவிருத்தி' வேலைத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் கண் பார்வை இழந்த 1000 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கி வைக்கும் வைபவம் திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல ஆனந்தா ஆரம்பக் கல்லூரியில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்த்ழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் ஆலோசனையின் பேரில் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இங்கு நடமாடும் சேவை நிகழ்வும் நடத்தப்பட்டு கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டதுடன் தனியார் மருத்துவ சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்பட்டன
இந்நிகழ்வில் திவுலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் இந்திக ஜயசிங்க, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் டபிள்யு. டபிள்யு.எம்.பீ. குமாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :