கல்முனை பீச் பார்க் கட்டிடம் பயன்பாட்டிக்கு விட கோரும் பொது மக்கள்!எம். என். எம். அப்ராஸ்-
ம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர பிரிவில் உள்ள மாநகர சபை பராமரிப்பில் காணப்படும் கல்முனை பீச்பார்க்கில் புதிதாக நிர்மாணி்கப்பட்ட கட்டிடம் முடிய நிலையில் இதுவரை எதுவித பயன்பாட்டின்றி காணப்படுதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை கடற்கரை வீதியில் உள்ள குறித்த பீச் பார்க்கில் அமைந்துள்ள புதிதாய் காணப்படும் கட்டிடம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதுடன் இதுவரை மக்கள் பாவனைக்கோ,இதுவரை பயன்பாட்டில் உள்ளதாக இல்லை என தெரியவருகிறது.

குறிப்பாக அந்த கட்டிடத்தின் கதவுகள் மற்றும் கண்ணாடிகள் , கூரை பகுதி உடைந்த நிலையில் உள்ளதுடன்கட்டிட உள் பகுதிகள் மிகவும் பாழடைந்த நிலையில் குப்பை கூளங்கள் உள்ளதுடன் துர் நாற்றம் வீசும் நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

அத்துடன் குறித்த வீச் பார்க்கில் அடிக்கடி கட்டாக்காலிகள் நடமாடுவதுடன் , மழை காலங்களில் வீச் பார்க் வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதை காண முடிவதுடன் மேலும் குறித்த கட்டிட பகுதியில் கட்டாக்காலிகளின் தங்குமிடமாக உள்ளதை காணமுடிகின்றது .

குறித்த வீச் பார்க்கில் அமைந்துள்ள கட்டிடத்தினை விரைவில் பயன்பாட்டிற்க்கு விட வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர்

இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் ,ஆணையாளர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , உரியவர்கள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாய் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :