கல்முனை கமநல சேவைகள் மத்திய நிலையத்தினால் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்கான விதை பொதிகள்
எம் .என் .எம் .அப்ராஸ்-
செளபாக்கிய தேசிய வார்த்தை முன்னிட்டு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் நோக்காக கொண்டு நிலையான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்ட செய்கை பயனாளிகளுக்கு பயிர் விதைப்பொதிகள் கல்முனையில் வழங்கி வைக்கப்பட்டது .
கல்முனை கமநல நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எச். சி .ஜெயலால் சொய்சா அவர்களின் தலைமையில் கல்முனை கமநல சேவைகள் மத்திய நிலையத்தில்இன்று (03) நடைபெற்றது.

இதன் போது வீட்டுத்தோட்ட செய்கையாளருக்கு வீட்டு தோட்ட பயிர் செய்கையின் முக்கியத்துவம் பற்றி விவசாய திணைக்கள உத்தியோகத்தர் களினால் தெளிவூட்டப்பட்டதுடன், வீட்டு தோட்ட செய்கைக்கான விதை பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் தொழல்நுட்ப உதவியாளர் கே. குகலேந்தினி ,கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் டி. ஜயந்தி கல்முனை பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
மற்றும் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டு தோட்ட பயிர் செய்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரம் இம்மாதம் (நவம்பர் 01ஆந் திகதி தொடக்கம் 07ஆந் திகதிவரை ) அமுல்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :