பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் 75வது ஆண்டுவிழா



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு 4 பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் 75வது ஆண்டுவிழாவும் இக்கல்லுாாிக்காக தனது சொந்தக் காணியை அன்பளிப்பு செய்து கல்லுாாியை ஸ்தாபித்த மர்ஹூம் சேர் ராசிக் பரீட் அவா்களுக்கான துஆப் பிராத்தனையும் கல்லுாாியினல் நடைபெற்றது. கல்லுாாியின் இளம் எழுத்தாளா்கள் வட்டத்தினது மும்மொழி ஆக்கங்கள் கொண்ட இதழ் ஒன்றும் . கல்லுாாியின் 75வது தினத்தில் வெளியிட்டதுடன் பாடாசாலை மாணவத் தலைவியினால் 75வது ஆண்டு விழா தினத்திற்கான கேக் வெட்டி பரிமாறப்பட்டது.
இந் நிகழ்வுகள் கல்லுாாியின் அதிபா் திருமதி எம். என். எப் நஸ்ரியா முனாஸ் தலைமையில் 01.11.2021 கல்லுாாியின் ஹாஜாரா மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோசா முஸம்மில் , பிரதி அதிபா்களான ரஸ்மியா அபுபக்கா், அகீலா நவுமான் றியாஸ், பி. பொன்சோ மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளா் நசீர் மொஹமட் உட்பட சிரேஸ்ட ஆசிரியைகளும் முன்னாள் உப அதிபா்களும் சிரேஸ்ட மாணவிகளும் கலந்து சிறப்பதித்தா்.

இங்கு உரையாற்றிய கல்லுாாி அதிபா் நஸ்ரியா முனாஸ் உரையாற்றுகையில்

கொழும்பு மாவட்டத்திலும் மட்டுமல்ல முழு இலங்கையிலும் ஒரு சிறந்த பாடசாலையாக பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை திகழ்ந்து வருகின்றது. இக் கல்லுாாிக்காக தனது சொந்தக் காணியை அனபளிப்புச் செய்து இக் கல்லுாாியை ஸ்தாபித்த மா்ஹூம் சேர் ராசிக் பரீட் அவா்கள் முஸ்லிம் பெண்களின்கல்விக்கான தனது சொந்தக் காணியை வழங்கிய தினம் நவம்பா் 1 ,1946 ஆகும். இக் கல்லுாரி இன்றுடன் இக் 75 வருடங்களை கொண்டாடுகின்றது. தற்பொழுது இங்கு 3500 முஸ்லிம் மாணவிகளுடன் மும்மொழிகளையும் போதிக்கின்றன 135 ஆசிரியைகளும் உள்ளனா். . இக் கல்லுாாியில் கல்வி கற்ற மாணவிகள் இலங்கையில் மட்டுல்ல உலக நாடுகளின் வியாபித்துள்ளாா்கள். இக் கல்லுாாியின் வளா்ச்சிக்காக தன்னையே முற்று முழுதாக அர்ப்பணித்த அதிபா்களான ஆயிசா ரவுப், ஜெஸீமா இஸ்மாயில், அஸ்ரியா முபைல், கரீமா அப்துல் கபூர், பழிலுா ஜூரம்பதி, கலாநிதி ஹா்ஜான் மன்சுர், திருமதி வசீர்டீன், பௌசியா மஹ்ருப், ஆகிய அதிபா்களுக்கு எமது கல்லுாாி மாணவிகள் ஏனைய கல்வி சமுதாயமும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. அத்துடன் இக் கல்லுாாிக்கு இம் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பிணா்கள் அமைச்சா்கள், தனது செந்த நிதியில் உயா்தரப் பிரிவுக்கு கட்டிடங்களை நிர்மாணிததுக் கொடுத்தவா்களான கொடை வல்லள்களான டொக்டா் பஸ்லி நிசாா், மெலிபன் டெக்ஸ்டைல் கம்பணியின் அதிபதி இல்யாஸ் அப்துல் கரீம் ஆகியோறுக்கும் இங்குள்ள கல்விச்சமுகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
அத்துடன் பழைய மாணவி உப தலைவி பெரோஸா முஸம்மில் மற்றும் உறுப்பிணா்களும் கல்லுாாியின் வளா்ச்சிக்கு அவா்களினால் பங்களிப்பினை அவ்வப்போது செய்து வருகின்றனா். கொவிட் 19 காலப்பகுதியில் இவ் ஆரம்ப விழாவினை சிறிய அளவில் ஏற்பாடு செய்யபட்டுள்ளதையும் இதற்காக பாடுபட்ட கல்லுாாி ஏனைய பிரதி அதிபா்கள் ஆசிரியைகள் மாணவிகளுக்கும் அதிபா் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :