இழந்த கல்வியை ஈடுசெய்யும் 100 நாள் கல்வி வேலைத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்நூருல் ஹுதா உமர்-
கொவிட் - 19 வைரஸ் தாக்கம் காரணமாக இழந்த கல்வியை ஈடுசெய்யும் 100 நாள் கல்வி வேலைத்திட்டம் தொடர்பாக ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் கல்முனை கல்விவலய நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது கமு / லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீனின் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தின் பிரதான வளவாளராக கல்முனை வலய கல்வி பணிமனையின் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹறூன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார். இந்நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர் யு.எல்.எம். நிஸார் உட்பட ஆரம்பக்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :