ஜனாதிபதி ஆனைக்குழுவின் என்.ஜிஓ செயற்பாட்டாளா்கள் ஆஜராகி கருத்து



அஷ்ரப் ஏ சமட்-
னாதிபதி விசாரனை ஆனைக்குழு முன்னைய ஆனைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிா்கால நடவடிக்கை எடுத்தல் என நியமிக்கப்பட்ட ஆனைக்குழுவின் அமா்வு (13.10.2021) புதன்கிழமை பண்டார நாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தின் திலிப் அரையில் நடைபெற்றது. இவ் ஆனைக்குழுவின் தலைவmaரும் உயா் நீதிமன்ற நீதிபதி துலிப் நவாஸ் அவா்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆனைக்குழுவின் மேலும் இரு உறுப்பிணா்களும் சட்டத் திணைக்களத்தின் சட்ட அலுவலகரும் சமுகமளித்திருந்தனா்.

இக் ஆனைக்குழுவில் சமாதான கவுன்சிலின் பணிப்பாளா் கலாநிதி ஜெஹான் பெரேரா மற்றும் உப தலைவா் முஸ்லிம் கவுன்சில் ஹில்மி அகமட் , ஓய்வுபெற்ற பிஸப் அஸ்ரி பெரேரா, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா் ரீ.ஜெயசிங்கம், கலாநிதி ஜோ வில்லியம், காணமல் ஆக்கப்பட்ட பெண்களின் தலைவி திருமதி விசாகா தர்மாதாச ஆகிய செயற்பாட்டாா்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனா்.
இவ் ஆணைக்குழுவில் முன்வைத்த கருத்துக்கள் சுருக்கமாக பின்வருமாறு -
(1) இந்த நாட்டில் அமுலில் உள்ள அலுவலக மொழிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகினறது. அதனை தமிழ் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த வாரம் ஜனாதிபதி அவா்கள் அநுராதபுரத்தில் இரானுவ வீரா்களுக்காக அமைக்கப்பட்ட கிரிக்கட் மைதானமொன்றினை திறந்து வைத்தாா். அத் திறப்புப் பலகையில் ஆங்கிலம், சிங்கள மொழிகள் மட்டுமே காணப்பட்டது. தமிழ் மொழி அதில் இடம்பெறவில்லை. மும் மொழி பிரயோகம் இந்த நாட்டில் கண்டிப்பாக அமுல்படுத்தப்படல் வேண்டும்.
(2) இலங்கையில் உள்ள அரச கூட்டுத்தாபணங்கள் ,அதிகார சபைகளின் தலைவா் பதவிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்காக ஆங்கில பத்திரிகையில் 36பேர்களது பெயா்கள் அன்மையில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு சிறுபான்மையினருமே அதில் இடம் பெற்றிருக்கவில்லை. உதாரணத்திற்கு வடக்கில் உள்ள பனை உற்பத்தி சம்பந்தப்பட்ட பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் பதவிக்கும் பெரும்பான்மையினரின் பெயரே காணப்பட்டது. ஆகவே தான் இந்த நாட்டில் பதவிகள் ,நியமனங்கள் வழங்கும்போது அந்த இனங்களது விகிதாசாரம் கண்டிப்பாக பேனப்படல் வேண்டும்.
3. தற்போதைய அரசாங்கத்தின் 33 அமைச்சுக்களின் செயலாளா்கள் நியமிகக்ப்பட்டுள்ளனா் அதில் ஒரே ஒரு தமிழர் நியமிகக்ப்பட்டிருந்தாா். முஸ்லிம்கள் ஒருவருமே நியமிக்கப்படவில்லை.
4. கொவிட் 19 மரணமாகும் முஸ்லிம்,கிரிஸ்த்தவா்களது சடலங்களை அடக்குவதற்காக பல போராட்டங்களை முஸ்லிம்கள் செய்தனா். பல சடலங்கள் எரித்த பிறகு முழு நாட்டில் வாழும் முஸ்லிம் கிரிஸ்த்தவ மக்களது கொவிட் மரணத்தினை அடக்கம் செய்யவதற்காக ஒரே ஒரு இடம் அனுமதி வழங்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்களது சடலங்களை எரிப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் 13 வழக்குகள் உயா் நீதிமன்றில் தாக்கல் செய்தும் அதனை உயா் நீதிமன்றம் விசாரிப்பதற்குக் கூட ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒர் இடத்திலாவது கொவிட் 19 அடக்கம் செய்யும் முஸ்லிம் கிரிஸ்த்தவா்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்படல் வேண்டும்.
5. பொதுபலசேனாவின் செயற்பாட்டாளா் ஞானசாரத் தேரர் பகிரங்கமாகவே அரச மற்றும் தனியாா் தொலைக்காட்சிகளில் தோன்றி முஸ்லிம்களது நம்பிக்கையான ஓர் இறைவன், அல்லாஹ்வை வெறுப்புப் பேச்சுக்களை பகிரங்கமாகப் பேசுகின்றாா். இதற்காக அரச தொலைக்காட்சிகளிலும் நேரம் ஒதுக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. இவறது வெறுப்பு பேச்சு பற்றி பல குழுக்கள் பொலிஸி்ல் முறையிட்டும் இதுவரை அதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .ஆனால் முகநுாலில் இளம் எழுத்தாளா்கள், தமிழி மொழியில் எழுதிய கவிதையில் வெறுப்பு பேச்சு உள்ளதாகக் கூறி அவரை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்கள். முஸ்லிம்கள் குர்ஆனை வைத்திருந்தவா்கள், தனது போனில் குர்ஆன் வசனம் ஹதீஸ் வைத்திருந்தவா்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வெறுப்பு பேச்சு என்ற நிலையில் வருடக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா். சந்தேகத்தின் பேரில் பொலிஸாா் பாதுகாப்பு படையினரால் கைது செய்து 90 நாட்களுக்கு மேலாக அவா்களை நீதிமன்றத்தில் கூட ஆஜா் படுத்தாமலும் பினை வழங்காமலும் வைக்கப்பட்டுள்ளனா். இந்த பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படல் வேண்டும் அல்லது அதனை திருத்தி அமைத்தல் வேண்டும்.
5. வட கிழக்கில் நடைபெற்ற 30 வருடகால யுத்தம் கார்ணமாக தாய்மாா்கள் தமது பிள்ளைகள், உறவினா்கள் பலா் காணாமல் போகியுள்ளனா் . அவா்கள் பற்றி எவ்வித தகவலும் இதுவரை இல்லை. இவா்கள் பற்றி உயிருடன் இருக்கின்றாரா ? இல்லையா ? என்று உறவினா்களுக்கு அறிவிக்கப்படவில்லை. தமது உறவினா்களை நினைத்து தாய்மாா் மனைவிமாா்கள் மனம் உறுகிக் காணப்படுகின்றாா்கள். காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்காக நிறுவப்பட்ட அலுவலகத்திற்கு அப்பிரதேசம் சாா்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படல் வேண்டும்.
6. இந்த நாட்டில் சமூக செயற்பாடுகள் சிவில் சமுகத்திற்காக குரல் கொடுக்கும் சகல அரச சாா்பற்ற நன்நோக்கு தொண்டா் நிறுவனங்களை ஒருபோதும் இல்லாதவாறு என்.ஜி.ஓக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினை பாதுகாப்பு அமைச்சில் கீழ் வைக்கப்பட்டு சகல செயற்பாடுகள் விசாரனைகள் எனக் கூறி அடிக்கடி பாதுகாப்பு படையினா் பரிசோதானை செய்கின்றனா். விசாரணை செய்கின்றனா். இந் நிறுவனங்கள் பெற்றோா்களை இழந்தவா்கள் சிறுவா்களது கல்வி புலமைப்பரிசில் வாழ்வதாரம் போன்ற உதவிப் பணங்கள் ,உபகரணங்களைப் வழங்கி வந்தனா். கடந்த இரண்டு வருடமாக உதவி பெற்ற குடும்பங்கள் சிறாா்கள் மாணவா்கள் பெரிதும் கஸ்டங்களை அனுபவதித்து வருகின்றனா்.
7. இந்த ஆட்சியில்தான் இன நல்லுரவு தேசிய நல்லிணக்கம் மற்றும் புனா் வாழ்வு புனரமைப்பு போன்ற அமைச்சுக்கல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சுக்களின் செயற்பாடுகள், இனங்கள் நல்லுறவு புனா்வாழ்வு புனரமைப்பு போன்ற திட்டங்கள் இல்லாமல் பொதுமக்கள் பல கஸ்டங்களை எதிா்நோக்குகின்றனா்.

8. கிழக்கில் புதிதாக எல்லைப் பிரதேசத்தில் வாழும் பெரும்பாண்மையினா் சிறுபான்மையினா் வாழும் பிரதேசங்களில் உள்ள காணிகளை பலவந்தமாக அத்துமீறி குடியேறுகின்றனா். . இவை பற்றி சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களிலும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாதுரு ஓயா மாகவலி போன்ற காணிகள் பற்றி நீதிமன்றில் வழக்கு தாக்கலும் செய்துள்ளோம். அத்துடன் 1990 களில் வந்தாரமுல்லை பல்கழைக்கழக அருகில் இருந்த அகதி முகாம்களில் பலா் பலவந்தமாக அழைக்கப்பட்டு காணாமல் போகியுள்ளாா்கள். அவா்கள் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

09. வட கிழக்கு மாகாண சபைகளது சகல அதிகாரங்கள் நியமனங்கள் அந்தந்த மாகாண ஆளுணருக்கே வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபை முதலமைச்சா்கள் , அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்ட்டு காணப்படுகின்றன.. ஆளுணரில் மாகாணத்தில் உள்ள பொது நிர்வாகம் மாகாண நியமனங்கள் , உயா் பதவிகள் அதிகாரங்கள் மாகாண முதலமைச்சா்களுக்கு வழங்கப்படல் வேண்டும். ஆகக்குறைந்தது மாகாணங்கள் தோ்தல் நடைபெற்றால் குறிப்பாக வட கிழக்கு பிரதேச மக்கள் பிரநிதிகள் தமது பிரதேச உறுப்பிணா்கள் ஊடாக சேவைகைள் அபிவிருத்திகள் பெற்றுக் கொள்ளதாக இருக்கும் மாகாண சபை தோ்தல் பிற்போடாது உடன் அதனை நடத்துதல் வேண்டும்.

10. வட கிழக்கில் மக்களால் தெரிபு செய்யப்பட்ட மக்கள் பிரநிதிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும அப்பிரதேச அபிவிருத்திகள் நிர்வாக சேவைகளை அரச அதிகாரிகள் செயற்படுத்தல் வேண்டும்.
11. காணமல் போனவா்களது அல்லது யுத்தத்தில் இறந்தவா்களது நினைவு கூறுதலுக்கு அனுமதி அளித்தல் வேண்டும் தாய் பிள்ளைகள் உறவினா்கள் இறந்தவரை வருடா வருடம் ஒரு முறையாவது நினைவு கூறுவதற்கும் பாதுகாப்புப் படையினா்களினால் தடை விதிக்கப்படுகின்றது.

12. பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது குற்றம் இழைக்காது சந்தேகத்தின் பேரில் கைது செய்ப்பட்டவா்களை 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு தடுத்து வைத்துள்ளனா். ஆக்க குறைந்தது அவா்களை நீதிமன்றில் ஆஜா்படுத்தப்படல் வேண்டும். அவா்களுக்கு ,பினை வழங்குதல் போன்ற சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
13 ஜனாதிபதி அவா்கள் ஜ. நா வில் உறையாற்றும்போது தேசிய நல்லிணக்கம், அரசியல் யாப்பு மாற்றம் பற்றி குறிப்பிட்டாா். அவற்றை உடன் செயல்படுத்துவாா் என நாங்கள் எதிா்பாக்கின்றோம். என அங்கு சமுகம் தந்த சமாதானப் கவுன்சிலின் உறுப்பிணா்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனா்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :