ஜனாதிபதி ஆணைக்குழு இன்றைய அமா்வில் முன்னாள் வெளிநாட்டு அமைச்சின் செயலாளா் சிவில் சேவன்ட் பல்லியக்கார சாட்சியம்.


அஷ்ரப் ஏ சமத்-

னாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராயும் ஆணைக்குழுவின் தலைவரும், உயா் நீதிமன்ற நீதியரசா் ஏ.எச்.எம் டி நவாஸ் தலைமையில் (27.10.2021) புதன்கிழமை அமா்வு பி.எம்.ஜ.சி.எச் ல் இடம்பெற்றது.

இவ் ஆணைக்குழு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் ,முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிா்கால நடவடிக்கைகளை சம்பந்தப்பட் விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பித்து அதனை அமுல்படுத்தி வருகின்றது. இவ் ஆணைக்குழுவின் எனைய 3 உறுப்பிணா்களும், சட்ட திணைக்கள அதிகாரிகளும் இம் அமா்வுகளில் சமுகமளிக்கின்றனா்.

இவ் ஆணைக்குழுவின் விசாரணைக்காக முன்னாள் வெளிநாட்டு அமைச்சின் செயலாளா், வடக்கு மாகாண ஆளுனா் , ஜக்கிய நாடுகள் ஜெனிவா, மற்றும் நியோக் நிரந்தர வதிவிடப் பிரநிதியாகவும் பதவி வகித்தவரும் (கற்றுக் கொள்ளும் பாடம் மற்றும் நல்லினக்கம் பற்றிய ஆணைக்குழுவின் ( எல்.எல்.ஆர்.சி) உறுப்பிணருமான எச்.எம். பல்லயக்கார அவா்கள் தாம் முன் வைத்த அறிக்கைகள் சிபாா்சுகள் சம்பந்தமான கருத்துக்களை இவ் ஆணைக்குழுவின் முன் தோன்றி சாட்சியமளித்தாா்.. அவா் இலங்கையில் உடன் எடுக்க வேண்டிய நல்லிணக்க முயற்சிகள் பற்றியும் பழைய ஆணைக்குழு நடவடிக்கைகளையும் சிபாா்சுகளையும் , அநுகூலங்கள் பற்றியும் சிலாகித்து இங்கு பேசினாா் திரு. பல்லியக்கார.

பழைய ஆணைக்குழுக்கள் முன்மொழிவு செய்த சகல சிபாா்சுகளையும் அவ்வப்போது பதவியில் இருந்து அரசாங்கங்கள் உரிய காலத்தில் அமுல் படுத்தியிருந்தால் எமது நாட்டின் சிறிய பிரச்சினைகள் இன்றும் சர்வதேச ரீதியில் வியாபித்திருக்காது.எனக் கூறினாா். எனது எல்.எல்.ஆர்.சி. அறிக்கையில் 285 சிபாா்சுகள் செய்திருந்தபோதும் அதில் 140 மட்டுமே அமுலாக்குவதற்கு முயற்சித்தபோதும் அவ் அறிக்கைக்கு என்ன நடந்தது ? என இந்த ஆணைக்குழு இதனை அறிந்து ஆராய்ந்து அதற்கான முன்மொழிவுகளை வழிநடத்துதல் வேண்டும்.

 எனது அறிக்கையில் 140 சிபாா்சுகளை அமுல் நடத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றினை கடந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் கையளிக்கப்படடது. அவா் இவ் அறிக்கை சிறப்பானதொரு அறிக்கை என தெரிவித்து அவர் சிலவற்றை அமுல்படுத்தவும் அன்று முயற்சித்தாா்.

.(எல்.எல்.ஆர்.சி) வகுத்த சிபாா்சுகளில் எவை? எவை அமுல்படுத்தபட்டுள்ளன என்பதனை சம்பந்தமாக இதுவரை எந்தவொரு! பகிரங்க அறிக்கை விடுக்கப்படவில்லை எனவும் திரு. பல்லியக்கார முன்மொழிந்தாா். இந்தப் பிண்னணியில் இந்த நாடு எடுக்க வேண்டிய எதிா்கால நடவடிக்கை என்னவாக அமைய வேண்டும். என்பதை இந்த பகிரங்க ஆணைக்குழு தெரிவிக்க வேண்டும். எனவும் அவா் அங்கு கூறினாா்.

பல வெளிநாட்டு சக்திகள் இப்போது இந்த நாட்டுப் பிரச்சினைகளுக்குள் ‘மூக்கை நுழைக்கின்றனா். குறிப்பாக ஜரோப்பிய யூனியன் , இஸ்லாமிய நாடுகள் ஒன்றியம் (ஜ.ஓ.சி) ஜக்கிய இராச்சிய காங்கிரஸ் , ஆகியன இலங்கையை குறிபாா்த்திருப்பது கவலையளிக்கின்றது எனது 2011 பழைய சிபாா்சுகளை அமுல்படுத்தியிருந்தால் இப்பிரச்சினைகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். முன்னாள் வெளிநாட்டு அமைச்சா் லகஷ்மன் கதிா்காமர் கூட விடுதலைப்புலிகள் அமைப்பினை தடைசெய்வதற்கு அவா் கூறியதை அன்று சகல வெளிநாடுகள் செவிமடுத்து அதனைச் செய்தனா். 

குறிப்பாக ஜரோப்பிய யூனியன் போன்ற ஒன்றியம் எமக்கு எதிராக நிற்பதனையும் இந்தக் கமிசன் பொறுப்பளிக்கும் விடயத்திலும் இன நல்லிணக்க வியடத்திலும் இந்த நாடு இனியும் எடுக்க வேண்டிய மிகவும் பாரிய முயற்சிகளை சிபாா்சு செய்ய வேண்டிய கடமையும் இந்த ஆணைக்குழுவுக்கு இருப்பதனை அவா் சாட்சியமளித்தாா்.

பல உதாரணங்களை எடுத்துக் கூறிய திரு. பல்லியக்கார - எல்.எல்.ஆர்.சி மாவட்ட ரீதியிலும், பிரதேச செயலாளா் மட்டத்திலும் சர்வமத குழுக்களை அமைத்து (அக் கிராமத்தில் உள்ள ஆமதுருமாா், ஹிந்து குருக்கள், மௌலவிமாா்கள், கிரிஸ்த்துவ பாரதிமாா்கள்) கொண்டதொரு குழு அடி மட்டத்தில் ஏற்படும் பிணக்குகளை அடையாளம் கண்டு உடன் தீா்த்துவைத்தல். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கங்களை ஏற்படுத்துதல் பற்றி ஏற்கனவே எல்.எல். ஆர்.சி அறிக்கையில் சிபாா்சு செய்யப்பட்டிருந்தது.

. அந்த சிபாா்சுகளை அமுல்படுத்தியிருந்தால் அளுத்கம, ஜின்தோட்ட போன்ற பிரதேசங்களில் இனக்கலவரங்கள் நடைபெற்றிருக்காது. இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு சமிக்கை செய்து சிறிய பிரச்சினைகளை அவ்விடத்திலேயே உடன் தீா்க்கவும் முடியும். எனவும் அவா் கூறினாா். ஆனால் இன்று இலங்கையில் இனப்பிரச்சினைகள் மத ரீதியான பிரச்சினைகள் வியாகூலமடைந்துள்ளது. இவ் விடயங்கள் ஜ.நா. மனித உரிமை அமையத்திலும் வியாபித்திருக்கின்றது. ஆகவே எல்.எல்.ஆர்.சி சிபாா்சுகளை 2011ஆம் ஆண்டே அறிக்கை சமா்ப்பித்தோம். .

 இந்த சிபாா்சுகளுக்கு என்ன நடந்தது.? நீதியரசர் மெக்ஸல் பரனவிதாரன கமிசன், கானாமல் போனோா் கமிசன் அறிக்கைகள் இதுவரை அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஒரு துரதிஸ்டமே. என்றாலும் இவ் அரசு காணமல் போனோா் அலுவலகமொன்றை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒருவா் உடன் மரணமடைந்தால் அந் நாளோடு அந்த வீட்டில் துக்கம் முடிந்துவிடும். ஆனால் காணாமல்போனோா் விடயத்தில் அந்தக் குடும்பம் வாழ்க்கை பூராகவே என்றோ ஒரு நாள் கனவனோ, மகனோ மகளோ வீடு வருவாா் ? என என்னி வாடுகின்றனா். 

இது மனித சகஜமானதொரு விடயமாகும். காணாமல் போனோா் விடயத்தில் பரணகம விசாரணையில் விரிவான தீா்வுகளை அவா் முன்மொழிவில் குறிபிட்டிருந்தாா்.

 அதேபோன்று எங்களது எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் காணாமல்போனோா்களை சட்டமா அதிபா் திணைக்களத்தில் ஒரு விசேட பிரிவினை ஏற்படுத்தி அந்த பிரிவின் ஊடாக சகல மாவட்ட நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படல் வேண்டும்.

 அவா்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கி சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அரச நிறுவனமான புனா் வாழ்வு புனரமைப்பு அதிகார சபை (ரெபியா) ஊடாக நஸ்ட ஈட்டுத் தொகைகள் வழங்கப்படல் வேண்டும். ஜே.வி.பியின் புரட்சிக் காலத்தில் காணாமல் போனோா்களுக்கு இவ்வாறு புனா் வாழ்வு அதிகார சபையினால் நஸ்ட ஈட்டுத் தொகை வழங்க்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

அதே நேரம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இதே போன்று விடுதலைப்புலிகளினால் 600 பொலிஸ் உத்தியோகத்தா்களை கடத்திச் செல்லப்பட்டாா்கள் அவா்களுக்கும் எவ்வித விசாரனைகள் தீா்வுகளும் வழங்கப்படவில்லை.

அன்மையில் இரானுவ வீரா்கள் நினைவு தினம் , சுதந்திர தினம் ஜக்கிய நாடுகள் நிகழ்வுகளில் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் உரையில் எல்லா சமூகமும் ஒன்று கூடி சமயங்கள் ,மதகுருமாா்கள் ஒன்று சோ்ந்து எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இனியும் இரத்தம் சிந்தத் தேவை இல்லை என ஜனாதிபதி உறுதி மொழி கூறினாா். அதனை அவா் செயல்படுத்தல் வேண்டும்.

 சகல பிரஜைகளும் ஒன்றினைந்து நிம்மதியாக இந்த நாட்டில் வாழுதல் வேண்டும். என்பது எமக்கு நம்பிக்ககையூட்டுகின்றது.
அன்மையில் முஸ்லிம்கள், கிரிஸ்த்தவா்கள் மட்டுமல்ல ஆசிரியா்களது சம்பளப் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட விடயங்கள் கூட ஜக்கிய நாடுகள் மனித உரிமையில் பேச்சபடும் அளவுக்கு எமது பிரச்சினைகளை வியாகித்துள்ளன. இவ்வாறான பிரச்சினைகள் இலகுவாக அடிமட்டத்தில் இருந்து தீா்க்கப்பட வேண்டிய சிறிய பிரச்சினைகள் ஆகும்

.அன்மையில் இலங்கை வந்த ஜரோப்பிய நாடுகள் பிரதிநிதிகள் பயங்கர வாதச் சட்டத்தினை இலங்கை அமுல்படுத்தியிருப்பதை உடன நிறுத்தாவிட்டால் வெளிநாட்டு பொருட்கள் ஏற்றுமதி வரிச்சலுகையை நாங்கள் நிறுத்துவோம் எனக் கூறிச் சென்றுள்ளனா் . கலாநிதி சரவணமுத்து அவா்களின் சமாதான செயற்பாட்டு அமைப்பு பல அறிக்கைகளை மும் மொழிகளிலும் மொழிபெயா்த்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளாா். 

அவைகள் மிகவும் பிரயோசமானது. வடக்கில் இதுவரை 22 ஆயிரம் ஏக்கா் காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது . யுத்த காலத்தில் இடம் பெயா்ந்த மக்களை அவா்களுக்குரிய காணிகளை மீளக் கையளித்தல் வேண்டும். அல்லது வேறு காணிகள் வழங்கப்பட்டு அவா்கள் அகதி முகாம்களிலிருந்த காலத்திலேயே குடியமா்த்தப்பட்டிருக்க வேண்டும். 

 யுத்தம் நடைபெற்று முடிந்த உடனேயே எனது அறிக்கை 5000 க்கும் மேற்பட்டோா்கள் ஆயிரக்கணக்கான மணித்தியாலயங்கள் செலவழித்து யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்கு எனது அதிகாரிகள் நேரடியாகச் சென்று பல்வேறு மதங்கள் , இனங்கள் நிலப்பிரச்சினைகள் , காணாமல் போனோா்களை பேட்டி கண்டு அதனை பதிவு செய்து அறிக்கையாகவும் வெளியிட்டோம்.

சனல் 4 விடயத்திலும் 30 நாட்கள் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரையாளா் மட்டத்தில் 2 வெளிநாட்டு தொழில்நுட்பபவியலாளா்கள் அழைத்து ஆராய்ந்து அறிக்கையில் சமா்ப்பித்தோம். ஆனால் மூலப்பிரதி ஒரிஜினல் வீடியோவை சனல் 4 தர மறுத்துவி்ட்டது. அது தொழில் நுட்ப ரீதியில் மீள செயற்படுத்தப்பட்ட ஒரு காட்சியாகவே நாங்கள் கருதுகின்றோம்.

உயிா்த்த ஞயிறு தாக்குதல் விடயத்தினைக் கூட அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.. தற்பொழுது இவ்விடயம் சா்வதேச சமூகத்திடம் தீா்வு பெற மல்கம் கார்டினா் அவா்கள் முயற்சிகள் செய்யப்படுகின்றது. அரசியல் வாதிகள் காலத்துக்கு காலம் இனங்களை மத ரீதியாகவும் தமது அரசியல் நிகழ்சிகளுக்கு மக்களை பிழையான விடயங்களில் திசை திருப்புகின்றனா். என அவா் அங்கு ஆனைக்குழு முன் சாட்சியமளித்தாா்.

தமிழ் முஸ்லிம் எதிா்க்கட்சிகள் சகல கட்சிகளும் ஒன்றினைந்தே நமது நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீா்வு காணப்படல் வேண்டும் உதாரணமாக . பங்களதேஸில் அங்கு வாழும் சிறுபான்மை பௌத்தா்கள் விடயத்தில் பிரதமா் சேக் ஹசீனாவும் எதிா்க்கட்சித் தலைவா் பேகதாஸ் காலிதாவும் ஒன்றினைந்து ஓரு மேடையில் தோன்றி தீா்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளனா். அவா்கள் நாட்டில் இருந்து இடம் பெயா்ந்து ஒரு போதும் டயஸ்போரா என வெளிநாடுகள் அமைக்கவில்லை. எனவும் திரு பல்லியக்கார அங்கு தெரிவித்தாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :