மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் ஹில்மி முகையதீன் பாவா பொறுப்பேற்புஎம்.ஏ.முகமட்.-
மூதூர் சுகாதார வைத்தியதிகாரியாக டாக்டர் எம்.பி.எம்.ஹில்மி முகையதீன் பாவா (26) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிந்த
டாக்டர் என்.எம்.எம்.ஹஸ்ஸாலியின் வருடாந்த இடமாற்றத்தை தொடர்ந்து அவரின் இடத்திற்கு, கிண்ணியா தள வைத்தியசாலையில் இரத்த வங்கி வைத்தியதிகாரியாக கடமை புரிந்த எம்.பி.எம்.ஹில்மி முகைதீன் பாவா நியமிக்கப் பட்டுள்ளார்.

இவர் திருகோணமலை மாவட்டத்தில் இலவச நடமாடும் வைத்திய சேவையைச் செய்தவரும்,சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமாவார்.
முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபின் மூத்த மருமகனும் ,மர்ஹும் முகையதீன் பாவா ஆசிரியரின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :