நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு நடாத்தும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு !நூருல் ஹுதா உமர்-

"மாணவர் மகுடம்" வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய "சாதனையாளர் கௌரவிப்பு விழா" சனிக்கிழமை பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். இதன் போது நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் இருந்து க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றி அனைத்து பாடங்களிலும் அதிவிசேட சித்தி 9A சித்தி பெற்ற 13 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் புவனேந்திரன், கல்முனை டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் டாக்டர் எம் ரிசான் ஜெமீல், நிந்தவூர் கோட்ட கல்விப் பணிப்பாளர் எம் சரிப்தீன், முன்னாள் நிந்தவூர் கோட்ட கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் எஸ் அஹமது, பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :