கிளினிக் நோயாளர்களுக்கு அஞ்சல் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட மருந்துப் பொதிகள் சனிக்கிழமை (30) முதல் இடைநிறுத்தம்



மினுவாங்கொடை நிருபர்-
கொவிட் தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கு அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் விநியோகிக்கப்பட்டு வந்த மருந்து வகைகள் அடங்கிய பொதிகள், (30) சனிக்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் அறிவுறுத்தலுக்கமைய, ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகத்தினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சகல பிரதி அஞ்சல் மா அதிபர்கள், அஞ்சல் அத்தியட்சகர்கள் உட்பட அஞ்சல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொவிட் தாக்கம் குறைவடைந்து, மக்கள் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாலேயே, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்களால் விநியோகிக்கப்பட்டு வந்த மருந்துப் பொதிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :