ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா? இல்லையா? முடிவு இன்று!!



நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று (03) மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயலணி இன்று ஜனாதிபதி தலைமையில் கூடி உண்மை நிலையை ஆராயும். பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதி கூறினார்.

இதேவேளை, கொரோனா பரவலை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் 18 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :