பத்து இலட்சம் வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது
இதனடிப்படயில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ளகல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய பிரிவில் தெரிவு செய்யப் பட்ட சமூர்த்தி உதவி பெறும் மற்றும் சமுர்த்தி உதவி பெற தகுதியான குடும்பங் களுக்கு வீட்டுத்தோட்ட விதைப்பொதிகள் மற்றும் தென்னங் கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகல்வு கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் இன்று (09) கல்முனைக்குடி 4ஆம் பிரிவு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர்
ஜே . லியாக்கத் அலி ,கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர் ஏ. ஆர். எம். சாலிஹ் ,கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா, வலய உதவி முகாமையாளர் எஸ். எல். அஸீஸ் சமூர்த்தி உத்தி யோகத்தர்களான எம்.ஐ.எம். சித்தீக், எஸ்.எச். சமீம் மற்றும் பிரிவு மட்ட தலைவர்கள் என கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment