தலை நகர் கொழும்பில் உள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையங்களின் இன்றைய நிலை.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
டந்த ஒரு மாத்திற்கும் மேலாக நாடு தனிமைப்படுத்தல் உரடங்குச் சட்டம் மூலம் முடக்கப்பட்ட நிலையில் நாளை தளர்த்தப்படும் நிலையில் அரச மற்றும் தனியார் உள்ளுூர் போக்குவரத்துக்கள் இடம் பெற இருக்கின்றன. இந்த நிலையில் தலை நகர் கொழும்பில் உள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையங்களின் இன்றைய நிலை.
குறிப்பாக கொரோனா அச்சுறுத்தலையும் பயணிகளின் சுகாதார நலன்களையும் கருத்திற் கொண்டு கொழும்பு அரச மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் ஊழியர்கள் தண்ணீர் பீச்சியும், கிரிமி தொற்று மருந்துகள் தெளித்தும் கழுவி துப்பரவு செய்வதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை கொழும்பு பஸ்ரியான் மாவத்தையில் உள்ள தனியார் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் எந்தவித துப்பரவுப் பணிகளும் இடம் பெறாது வனாந்திரமாக காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
பெருமளவான மக்கள் வந்துபோகும் இப்பகுதி பஸ்தரிப்பு நிலையத்தை கிரிமி அழிக்கும் மருந்துகள் தெளித்தும் தண்ணீர் கொண்டும் துப்பரவு செய்யாது இருப்பதால் நோய்த் தொற்று ஏற்படுவதாற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசினதும், சுகாதாரத் துறையினரதும் நடைமுறைகளை தனியார் பேரூந்து நிலையத்திற்குப் பொறுப்பானவர்கள் கடைப்பிடிக்காத நிலைமைகளை இன்று நண்பகல் 1.30 மணிவரையும் காண முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :