மதுசாலைகளில் அலைமோதும் "குடிமக்கள்" : இலங்கையில் என்ன நடக்கிறது என மக்கள் அங்கலாய்ப்பு !



நூருல் ஹுதா உமர்-
லங்கையில் என்ன நடக்கிறது என மக்கள் அங்கலாய்க்கின்றனர். அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டில் பொது முடக்கம் ஒக்டோபர் முதலாம் திகதிவரை அமுலில் உள்ளது. ஆனால் மதுபான விற்பனை சாலைகள் அனைத்தும் நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பசி பட்டினியால் விலைவாசி அதிகரிப்பு வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

பெருங்குடி மக்களோ 1000 ரூபாய் 5000 ரூபாய் நோட்டுக்களுடன் மதுபான சாலைகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒழுங்கான முறையில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கும் குடிமக்களை நினைக்கும் போது நாடு எதை நோக்கி செல்கிறது என சிந்திக்க தோன்றுகிறது. பாதுகாப்பு தரப்பினரினதும் பொலிஸாரினதும் பாதுகாப்புடன் இடம்பெற்றுவரும் இந்த மது விற்பனையினால் எமது நாடு எதிர்வரும் நாட்களில் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்றை சந்திக்கவுள்ளது என்பது மட்டும் திண்ணம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :