ஜனாதிபதியின் "பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம்



சர்ஜுன் லாபீர்-

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் தேசிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கல்முனை பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதியின் "பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் - 2022" தொடர்பான முன்மொழிவுகளை தெளிவுபடுத்தி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று (30) வியாழக்கிழமை பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்
ஹரீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் - 2022 இன் கீழ்
01. வாழ்வாதார அபிவிருத்தி
02. பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
03. சூழல் மற்றும் பேன்தகு அபிவிருத்தி
04. சமூக நலனோம்புகை மற்றும் சமூக அபிவிருத்தி

ஆகிய நான்கு பிரதான அபிவிருத்தி கருத்திட்டங்களை மையமாக கொண்டு மும்மொழி வேலைத்திட்டங்கள் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம் ஜெளபர் அவர்களினால் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்,கணக்காளர் யூ.எல் ஜெளபர்,சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ் கிராம நிருவாக உத்தியோகத்தர் யூ.எல் பதியூத்தீன்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல்.யாஸீன் பாவா,பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.ஹசன்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா,இணைப்புச் செயலாளர் எம்.ஏ சப்றாஸ் நிலாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கிராமிய விதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வேலைத்திட்டத்தினை உடன் ஆரம்பிப்பது சம்மந்தமாகவும் ஆராயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :