மர்ஹும் அஸ்ரபின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு மர நடுகையும், விசேட துஆப் பிராத்தனையுடன் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!



பைஷல் இஸ்மாயில் -
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (16) அம்பாறை மாவட்ட பல பிரதேசங்களில் அவரை ஞாபகப்படுத்தி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மர நடுகையும், மர்ஹூம் அஸ்ரபின் ஈடேற்றத்துக்கான விசேட துஆப் பிராத்தனைகள், கத்தமுல் குர்ஆன் தமாம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

பாலமுனை பிரதேசத்தில் மர்ஹும் அஸ்ரப் நினைவுதின நிகழ்வுகளை கட்சியின் உயர் பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளருமான எஸ்.எம்.எம்.ஹனிபா மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.எம்.அலியார் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மர்ஹும் அஸ்ரபின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், உலமாக்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என மட்டுப்படுத்தப்பட்டளவில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :