கொழும்பில் உள்ள ’ஹூசைன் ரஸாக் (போல்ட்) ஜனாஸா மற்றும் சமுக சேவைகள் மன்றம் நேற்று (26.09.2021) கொழும்பு பாபா் வீதியில் உள்ள தோட்டங்களில்வாழும் 150 குடும்பங்களுக்கு உலா் உணவு பொதிகளை வழங்கி வைத்தனா்.
இவ் அமைப்பின் தலைவா் ஹூசைன் போல்ட் தகவல் தருகையில் 1974 ஆம் ஆண்டு கொழும்பு பொது வைத்தியாசாலையில் அருகில் வாட் பிளேஸில் வாழ்ந்து வந்தேன். அருகில் தான் பொது வைத்தியசாலையில் சவச்சாலைகள் இருந்தன. அங்கு நாளாந்தம் அநாதவராக கிடக்கும் மரணித்த உடம்புகளை பொரளை கணத்தையில் அடக்குவதற்காக பொது இலவச சமுக சேவை ஒன்றை ஆரம்பித்தேன் என்னுடன் ரவி ஜெயவா்த்தன இனைந்து இவ் நடவடிக்கையில் செயல்பட்டோம். கடந்த 47 வருடங்களில் 19 ஆயிரம் மேற்பட்ட மரணித்த உடம்புகளை இலவசமாக உறவினா் வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளேன். வசதியற்றவா்கள் பாதையோரம் மரணித்து கிடப்பவா்கள், பாதை ஓரம் யாகாசம் பெறுபவா்கள், நோய்வாய்பட்டவா்கள் பாதையில் இறந்து கிடந்தால் அருகில் உள்ள பொலிஸாா் எனக்கு அழைப்பு விடுப்பாா்கள். அல்லது வைத்தியசாலையில் அநாதவராக கிடக்கும் சபங்கள், பொது மயானத்திற்கு கொண்டு செல்வேன். அதற்காக எனது சொந்த வேண் ஒன்றையை செயல்படுத்துவேன். வைத்தியசாலையில் சில ஏழைகள் தமது உறவினா் இறந்தால் அதனை அவா்களது முகவரிக்கு மரணித்த உடம்பை கையளித்துவிட்டு கொழும்பு வருவேன். நாட்டில் யாழ் தொட்டு மலையகம் போன்ற சகல பிரதேசங்களுக்கும் தனியேஒருவனாக செயல்பட்டேன். . இதுவரை இலவசமாக 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணித்த மனித சவங்களை கொண்டு சேர்த்துள்ளேன். இதனை விட சபப் பெட்டிகள், வெள்ளைத்துணிகள், கொவிட் 19 க்குரிய பைகள் வழங்கி வருகின்றேன். இதற்காக சில அனுசரனையாளா்கள் எனக்கு வழங்குவாா்கள் அதனை ஏழை மக்களுக்கு வழங்கி வைக்கின்றேன். இத் தொழிலை ஒரு புனித தொழிலாகவே நான் கருதுகின்றேன். எனக்குப் பின்னரும் இதனை யாரவாது இவ் சமுக சேவையை பின்தொடரல் வேண்டும் என விரும்புகின்றேன். எனது தந்தையும் இதனைச் செய்தாா்கள். அவா்கள் மரணிதத பின் நான் தொடா்ந்தேன்.
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 காரணமாக 200 கொவிட் மரணித்த உடம்புகளை வைத்தியாலையில் சவச்சாலை மற்றும் , வீதிகளில் காணக்கிடைத்தால் இலவச சேவைக்கு கொழும்பு மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் அதிகாரிகள் எனக்கு அழைப்பு விடுப்பாா்கள் அவ்விடத்திற்கு நான் உடன் சென்று எனது வாகனத்தில் உரிய இடங்களுக்கு அல்லது இறுதி கிரியைகளை நடத்தி அதனை அடக்கம் செய்வேன். . எனது காலத்திற்குப் பிறகு இதனை தொடா்ந்து எடுத்துச் செல்வதற்காக நான் எனது பெயரில் ஒரு ஹசைன் ரஸாக் பௌன்டேசன் ஒன்றை உறுவாக்கி அதற்காக டாம் வீதியில் ஒர் அலுவலகமொன்றையும் உறுவாக்கி நிர்வாக அங்கத்தினரை இணைத்துக் கொண்டுள்ளேன்.
அத்துடன் வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு அனுசரனையாளா்கள் மற்றும் தனவந்தா்கள் எனக்கு வழங்கி வைக்கும் உணவுப்பொருட்கள், ஏழை மக்கள வீடுகளை நிர்மாணித்தல் போன்ற கைங்கரியத்துக்கும் மனிதபிமான முறையில் உதவி வருகின்றேன். இது வரை கொழும்பில் மட்டுமல்ல ஏனைய பிரதேசங்களுக்கும் உலா் உணவுப் பொதிகள் இரண்டாயிரத்திற்கும் மேல் இவ் 3 வாரங்களாக வழங்கி வருவதாகவும் ஹூசைன் போல்ட் தெரிவித்தாா்.

0 comments :
Post a Comment