சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் செய்தி



கொவிட்-19 கொரோணா வைரஸிக்கான முதலாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்ற வேளையில் எமது அலுவலகத்தினால் 2 வது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை (30/08/2021) இல் இருந்து வியாழக்கிழமை (02/09/2021) வரை தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கின்றோம். நீங்கள் முதலாவது தடுப்பூசியை பெற்றிருப்பீர்களாயின் இரண்டாவது தடுப்பூசியினை பின்வரும் நாட்களில் உங்களது கிராம சேவகர் பிரிவுக்கமைய உரிய நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்..
தயவு செய்து உங்களது கிராம சேவகர் பிரிவுகளுக்கு எந்த நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோ அதே போன்று உரிய நிலையங்களுக்கும் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

"தடுப்பூசி பெற வரும் போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதோடு முதலாவது தடுப்பூசி பெற்ற அட்டையினையும் கையோடு கொண்டு வாருங்கள்"

டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட்,
சுகாதார வைத்திய அதிகாரி,
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்- சாய்ந்தமருது


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :