தினம்தினம் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் அபாயநிலை!



காரைதீவு மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுங்கள்!
காரைதீவு பிரதேசசபை தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள்.
வி.ரி.சகாதேவராஜா-

ல்முனைப்பிராந்தியத்தினுள் வருகின்ற எமது காரைதீவு சுகாதாரப்பிரிவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்துவருவதைக் காணக்கூடியதாயுள்ளது. எனவே காரைதீவு பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் சுகாதாரநடைமுறையைப்பின்பற்றி பாதூகப்பாக நடந்துகொள்ளுங்கள் என காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
நேற்று மட்டும் 14 பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர். இதுவரை 08பேர் மரணித்துள்ளனர். இதுவரை 352பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளதுடன் 296பேர் குணமாகியுள்ளனர்.
ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுடனிருந்துவந்த காரைதீவு பிரதேசம் கடந்த சிலநாட்களாக தொற்றுவோர் எண்ணிக்கை 10ஜத் தாண்டிவருகிறது. பார்க்குமிடமெல்லாம் தனிமைப்படுத்தல் சிவப்பு நோட்டீஸ் அதிகரித்துவருகிறது.

எனவே மக்கள் உணர்ந்து வீட்டில் முடங்குவது சிறந்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் திரிபடைந்த டெல்டா வீரியமடைந்து தீவிரமாக பரவி வருகின்ற அபாய சூழ்நிலையில்இ நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000க்கு மேற்பட்டோர் இனங்காணப்பட்டுள்ளதுடன் 150க்கு மேற்பட்டோர் மரணிப்பதுடன் ஒரு மணித்தியாலத்திற்கு 05பேர் வீதம் மரணம் பதிவாகி வரகின்றது.

காரைதீவு வாழ் மக்கள் மிகவும் பொறுப்புணர்வோடு கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வதன் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று வீதமும் மரணிப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்திருப்பதைக் காண்கின்றோம். 12.08.2021ல் 100வது மரணம் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் ஏற்பட்டுள்ளது. அது 115ஜ தாண்டியுள்ளது.

நமது பிரதேசத்தில் தொற்று வீதம் இந்த நிலையில் மேலும் அதிகரிக்குமாயின் வைத்தியசாலைகளிலும் இடமின்றித் தவிக்க வேண்டிய அவல நிலை ஏற்படலாம்.

தன்னைத் தானே நாம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு எமது பிரதேசம் தள்ளப்படுமானால் பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தும் நிலைக்கு நமது பிரதேசம் மாறலாம் அதற்கு முன்னர் தங்களை தாம் பாதுகாத்துக் கொள்வோம்.

இந்த அபாய நிலையை உணர்ந்து, பாதுகாப்புபெற சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களான,

வெளியில் செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து, 02 மீற்றர் தூரம் சமூக இடைவெளியை பேணவும்.

பொதுக் கூட்டங்கள், சன நெரிசலான இடங்கள் மரண வீடுகள், திருமண நிகழ்வுகள் அவசியமற்ற ஒன்று கூடல்கள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

சுடு நீர் அருந்துவதுடன், அடிக்கடி கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக சவர்க்காரம் இட்டு கழுவிக் கொள்ளவும்.

கண்இ மூக்கு மற்றும் வாய் போன்றவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்த்துக் கொள்ளவும்.

வெளி இடங்களுக்கு சென்று வந்தால் கட்டாயம் நீராவி பிடிக்கவும்.

காய்ச்சல்இ இருமல் மற்றும் தொண்டை வலி இருந்தால் வீட்டிலேயே இருங்கள் தும்மல் வருகின்ற சந்தர்ப்பத்தில் உங்கள் முழங்கையால் தடுத்துக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்.

மேலதிக வைத்திய சேவை
தேவையேற்படின் 1990 அல்லது 1390 அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்கூறப்பட்ட விடயங்களை கட்டாயம் அனைவரும் கடைப்பிடித்தால் கொவிட்-19 டெல்டா வீரிய தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறமுடியும்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுங்கள். இவ்வறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கத் தவறும் ஒவ்வொருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :