பல்கலைக்கழக தொழில்நுடபவியல் பீடத்தின் ஏற்பாட்டில் நடைபொற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முப்பெரும் விழா பீடத்தின் கேட்போர் கூடத்தில் (04) பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்றது இதன் போதே தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நாஜீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒருவருடைய உயர்வு, திறமை மற்றும் செயல்பாடுகள் பற்றி பொறாமை வஞ்சகம் கொள்ளாமல் தான் எவ்வாறு முன்னேற்றம் அடைவது என்பதை சிந்தித்து தானும் அவ்வாறு முயற்சி செய்து வெற்றியடைய வேண்டும் எனவும் இங்கு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தர் பதவிக்கு முறையாக விண்ணப்பம் செய்து, தெரிவின்போது எதிர்பார்த்த தகைமைகள் மற்றும் ஏனைய நேர்முகப் பரீட்சை ஊடாக திறமை அடிப்படையிலேயே உபவேந்தராக நியமிக்கப்பட்டு வந்த போது மூன்று மாதத்திற்குள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல உயிர் அச்சுறுத்தலும் எனக்கு விடுக்கப்பட்டிருந்து. இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ஞாமல் எனது பணியை நேர்மையாக பல்கலைக்கழக சட்ட திட்டங்களுக்கமைவாக செய்து வந்தேன். அவ்வாறு நான் செய்கின்றபோது சிலருக்கு எதிரியாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றேன். இருந்த போதிலும் பல சவால்கள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டாவது முறையும் உபவேந்தராக விண்ணப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
இந்தப்பல்கலைக்கழகம் உங்களுடைய சொத்தாகும். இந்த பிரதேசத்தை சேர்ந்த விரிவுரையாளராக இருக்கட்டும் அல்லது ஏனைய பதவி நிலையில் இருக்கட்டும் அவர்கள் ஒரு பதவியுயர்வோ அல்லது ஆராய்ச்சிகளோ அல்லது வெளியீடுகளோ மேற்கொள்வதற்கு விண்ணப்பித்தால் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என்ற வகையில் அவர்களுடைய தகைமைகளுக்கேற்ப விரும்புகின்ற துறைகளில் முன்னேற என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கின்றேன். இந்த வகையில் ஆறு வருட பல்கலைக்கழக உபவேந்தராக பணியாற்றிமைக்கு திருப்தியடைகின்றேன்.
எனவே, யார்தான் என்ன சொன்னாலும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிகளை செய்யுங்கள். பல்கலைக்கழகத்தில் குழப்புவதற் கேன்றே சிலர் இருக்கின்றார்கள் அவர்களிடமும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களையும் முன்னேற விடாமல் தடுப்பபவர்களாகவும், அதற்கெதிராக செயல்படுபவர்களாகவுமே சிலர் இருக்கின்றனர். தகுதி வாய்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர்கள் போரசிரியர்களாக பதவியுயர்வு வழங்காமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வந்த நிலையில் எனது காலத்தில் விண்னப்பித்தவர்கள் 17 பேர் பேராசிரியர்களாக வருவதற்கு என்னால் முடிந்த பணியை செய்து கொடுத்தேன். அந்த பேராசிரியர் பதவியுயர்வுகளை பெற்றவர்கள் உங்களது பிராந்தியத்தைச் சேர்ந்தோர்களே என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நான், இந்த பல்கலைக்கழகத்தினை விட்டுச் சென்றாலும் நீங்கள் விரும்புகின்ற சந்தர்ப்பத்தில் பல்கலைக் கழகத்தினதும் விஷேடமாக இந்த தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காகவும் ஆலோசனைகள் மற்றும் ஏனைய பணிகளையும் செய்து தருவதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன். இந்த தொழில்நுட்பவியல் பீடத்தினை ஆரம்பிப்பதற்கே பல சவால்களை சந்தித்தேன்.
ஆகவே, பல்கலைக்கழகம் என்பது பல வசதிகளையும் கொண்டு இயங்குகின்ற நிறுவனமாகும். இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தங்களது உயர்வுகளை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் உபவேந்தர் பேராசிரியர் நாஜீம் தெரிவித்தார்.
இந்த வரலாற்று நிகழ்வின் போது கடந்த ஆறாண்டுகளாக உபவேந்தர் பதவி வகித்து எதிர்வரும் 08 ஆம் திகதி முடிவடைந்து செல்லவுள்ள உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், புதிய உபவேந்தராக பொறுப்பேற்கவுள்ள பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களை வரவேற்று பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. அத்துடன், தொழில்நுட்பவியல் பீடத்தின் ஸ்தாபக முன்னாள் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரீக் அவர்கள் சேவை நலன் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், புதிய உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ், தொழில்நுட்பவியல் பீடத்தின் ஸ்தாபக பீடாதிபதி கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட், தாவரவியல் தொழில்நுட்பவியல் திணைக்களத் தலைவர் கலாநிதி ஏ.என்.எம்.முபாறக், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் திணக்களத்தின் தலைவர் ஜனாப் கே.எம்.ரிப்தி ஏற்பாட்டுக்குழு தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எல். அப்துல் ஹலீம் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் அணியினர் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment