வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துறைசேனை புகையிரத வீதியில் சந்தேக நபரின் வீட்டில் வைத்து போதை மாத்திரை வியாபாரி ஒருவர் இன்று (05.08.2021) கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை வியாபாரியான சந்தேக நபரை பல நாட்களாக தேடிவந்த போதிலும் இன்று கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 48 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய குற்றப்த்தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனைப் பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவருடன் தொடர்புடைய வேறு நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தொடர்பாகவும் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment