"சுபீட்சத்தின் நோக்கு" சேதன உர உற்பத்தி வேலைத்திட்டம் அக்கரைப்பற்றில் ஆரம்பம் !



நூருல் ஹுதா உமர்-
ரோக்கியம் மற்றும் வினைத்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத் தன்மையற்ற உணவுக்கான உரிமைகள் எனும் அம்சம் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக செவ்வாய்க்கிழமை (24) அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் ஐ.எல் பாறூக் (இஸ்ஸடீன் ஹாஜியார்) இனுடைய முயற்சியில் மேற்கொள்ளப்படுகின்ற சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் , உப தவிசாளர் ஏ.எம். அஸ்ஹர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் (நழீமி), பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.பர்ஷாத், பள்ளிக்குடியிருப்பு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் மௌலவிஏ.எல்.எம்.அஷ்ரப், அக்கரைப்பற்று கமநல சேவை மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.எல்.ஹமீத், அக்கரைப்பற்று பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான் மற்றும் கமநல சேவை உத்தியோகத்தர்கள், விவசாய தொழில் நுட்பவியலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :