எமது தடுப்பூசி நிலையங்களுக்கு வந்து தகுந்த காரணங்களுக்காக தடுப்பூசியினை பெற முடியாமல் இருப்பவர்களுக்கான நடமாடும் தடுப்பூசி நடவடிக்கைகளை நாளை அதாவது திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பம் செய்ய இருக்கின்றோம். இந்த தடுப்பூசியினை 30 க்கு வயதிற்கு மேற்பட்ட விஷேட தேவையுடவர்கள், இத்தா கடமையில் இருக்கும் பெண்கள், நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருப்பவர்கள், தவிர்க்கமுடியாத காரணத்தால் வீட்டை விட்டு வெளிச் செல்லாமல் இருப்பவர்களுக்கான தடுப்பூசிகளை எங்களது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மாதுக்கள் உங்களது வீடுகளுக்கு வந்து தடுப்பூசி நடவடிக்கையினை மேற்கொள்ள இருக்கின்றனர். மேற்க்கூறிய நபர்கள் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ள செய்ய வேண்டியவை இது தான் உங்களது பெயர், முகவரி,தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை உங்களது பிரிவுக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தொடர்பு கொண்டு/ அவர்களுடை இலக்கத்திற்கு உங்களுடைய விபரத்தினை குறுஞ் செய்தி (SMS அனுப்புவதன்) மூலம் உங்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
உங்களது கிராம சேவகர் பிரிவிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களும் தொலைபேசி இலக்கங்களும்.
01) கிராம சேவகர் பிரிவு 1 தொடக்கம் 6 வரை (ஏ.எல்.எம்.அஸ்லம்- 0771211816)
02) கிராம சேவகர் பிரிவு 7 தொடக்கம் 12 வரை (எம்.என்.எம்.பைலான்- 0761186905)
03) கிராம சேவகர் பிரிவு 13 தொடக்கம் 17 வரை (எம்.எம்.எம்.பைசல்- 0771211818 )
டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட்,
சுகாதார வைத்திய அதிகாரி,
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்-
சாய்ந்தமருது

0 comments :
Post a Comment