இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதஸ்தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (19) ஊடகவியலாளர்கள் மத்தியில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் சுகாதார துறையினர் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை அமுல் படுத்தியுள்ளனர். அதற்கமைவாக மதஸ்தலங்களில் எவ்வித கூட்டு பிரார்த்தனைகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலிகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மன்னார் மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார்.
இதேபோன்று இந்து மற்றும் இஸ்லாமிய மதஸ்தலங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க உரிய தரப்பினரின் உதவ வேண்டும் என்பதும் உரிய தரப்பினர் மூலம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment