அடிப்படை குடிநீர் வசதி இல்லாமல் காணப்படும் வறிய குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கான புதிய குடிநீர் இணைப்பினை வழங்கும் செயற்திட்டத்தினை சமூக நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை முழுவதும் இயங்கி வருகின்ற "சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியம்" முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒலுவில் பிரதேச இணைப்பாளர் நிஜாஸ் வஹாப்தீன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் பிரதேசத்தில் அடிப்படை குடிநீர் வசதிகள் அற்ற சமுர்த்தி பெறுகின்ற தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு இவ் புதிய இணைப்புக்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
சமூக செயற்பாட்டாளர்களின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் மேற்படி நிகழ்வில் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஸாஹீர் அஹமட் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
இவ் அமைப்பின் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட இணைப்பாளர் அனைவருக்கும் பயனாளிகள் நன்றிகளை தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment