கிழக்கு மாகாண புதியகல்விப்பணிப்பாளராக நகுலேஸ்வரி புள்ளநாயகம் கடமையேற்பு



தரம்1இல் 12வருடங்கள் காத்திருப்பு: 33வருடகல்விச்சேவையின் உச்சமானபதவி!
வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்துக்கான புதிய மாகாணக் கல்வி பணிப்பாளராக, 33வருட கல்விச்சேவையிலுள்ள இலங்கை கல்விநிருவாகசேவையின் மூத்த முதலாந்தர அதிகாரி திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.ரி.எ.நிஸாம் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளரான திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் நேற்று திங்கட்கிழமை திருமலை மாகாணகல்வித்திணைக்களத்தில் மாகாணக் கல்வி பணிப்பாளராக தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
துறைநீலாவணையைச் சேர்ந்த இவர், கடந்த 33வருடகாலமாக கல்வித்துறையில் ஆசிரியராக அதிபராக கோட்டக்கல்விப்பணிப்பாளராக வலயக்கல்விபணிப்பாளராக சேவையாற்றிவந்தவர்.

1988இல் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றிவேளை 1.6.1993இல் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கான போட்டிப்பரீட்சையில் வடக்கு கிழக்கு மாகாணத்திலே அதிகூடிய புள்ளிபெற்று பொதுஆளணியில் தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு ,மண்முனைமேற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றிய அவர் பின்னர் பட்டிருப்பு வலயம் மற்றும் திருக்கோவில் வலயங்களில் மாறிமாறி வலயக்கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றி 2009இல் இலங்கை கல்விநிருவாகசேவையின தரம் 1இற்குத் தெரிவானார்.

அன்றிலிருந்து நேற்று வரை சுமார் 12வருட காலம் இந்தப்பதவிக்கு காத்திருக்கநேரிட்டது. இருப்பினும் 2019இல் சந்தர்ப்பம் கிடைத்தபோதிலும் அவர் அதனை ஏற்கவில்லை.

இதேவேளை பட்டிருப்பு வலயத்தின் புதிய வலயக்கல்விப்பணிப்பாளராக இ.க.நி.சேவை தரம் 1ஜச்சேர்ந்த எஸ்.மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :