சதொசவுக்கு கொண்டு வரப்பட்ட சீனி முறைகேடாக விநியோகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை- அமைச்சர் பந்துல



ஒலுவில் எம். ஜே.எம் பாரிஸ்-
க்களுக்கு நிவாரண அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்ட 2ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி முறைகேடாக வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றது. இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந் துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்:-

நாட்டின் தொற்று நிலைமை காரணமாக மக்கள் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அவர் களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதொச நிறுவனம் ஊடாக அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலையில் விநியோகித்து வருகின்றோம். இலங்கையில் இருக்கும் வர்த்தக நிறுவனங்களில் சதொச நிறுவனத்தில் மாத்திரமே குறைந்த விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

விசேடமாக தற்போது மிக முக்கிய மாக தேவைப்படும் முகக்கவசம் 10 ரூபா வுக்கு விற்கப்படுகின்றது. அதேபோன்று அரிசி வகைகள், சலவை சவர்க்காரம், கை கழுவும் திரவம் மற்றும் சீனி போன்றவை ஏனைய வர்த்தக நிலையங்களில் விற்கப்படும் விலையைவிட குறைந்த விலைக்கே விற்கப்படுகின்றன. நெல்லுக்கான உத்தரவாத விலையை விவசாயிகளுக்கு நிர்ணயித்து அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லை பெற்றுக் கொள்கின்றது. மேலும் தற்போது சீனி விலை அதிகரித்திருக்கின்றது. 140 முதல் 145 ரூபாவரை விற்கப்படுகின்றது. என்றாலும் நாங்கள் சதொச ஊடாக 115 ரூபாவுக்கு விநியோகித்து வருகின்றோம். என்றாலும் சில வியாபாரிகள் சதொச ஊடாக கூடுதலாக சீனியை பெற்றுக் கொண்டு, கூடிய விலைக்கு விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டதால் ஒருவருக்கு 5 கிலோ மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். என்றாலும் சில வர்த்தகர்கள் சதொச நிறுவன முகாமையாளர்களுடன் தொடர்பை வைத்துக் கொண்டு சதொச நிறுவனத்துக்கு வரும் சீனியை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

அதன் பிரகாரம் மக்களுக்கு நிவாரணமாக வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக்கு கொண்டு வரப்பட்ட 3,500 மெட்ரிக்தொன் சீனியில் 2 ஆயிரம் மெட்ரிக்தொன் காணாமல் போயிருக்கின்றது. இந்த சீனியை வியாபாரிகளுக்கு முறைகேடாக வழங்குவதற்கு ஒருசில சதொச முகாமையாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை இடைநிறுத்துமாறு அறிவித்திருக்கின்றோம். இவர்கள் மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் அவர்களுக்கு எதிராக அதிகூடிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்பேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :