ஆடி அம்மாவாசை பிதிர் தர்ப்பணம்.

ஹஸ்பர் ஏ ஹலீம்-

திருகோணமலையின் கன்னியா வெந்நீரூற்றில் பிள்ளையார் ஆலய ஆதின கர்த்தா திருமதி. கோகிலரமணி அம்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று(08) காலை 6.30 மணியளவில் திருகோணமலை மேல் நீதிமன்ற அனுமதியுடன் ஆடி அம்மாவாசை பிதிர் தர்ப்பணம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேணி சிறப்பாக நடைபெற்றது.

 பல அடியார்கள் பங்கு கொண்டு தங்களுடைய இறைவனடி சேர்ந்த உறவுகளுக்கு பிதிர் தர்ப்பணம் செலுத்தினர். உப்புவெளி பொலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கியிருந்தனர்.

ஆலய ஆதின கர்த்தா கருத்து தெரிவிக்கையில், "நூற்றான்டுகள் கடந்த வரலாற்றை கொண்ட கன்னியா பிள்ளையார் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பல இன்னல்களுக்கு மத்தியில் சட்ட ரீதியாக போராடி, நீதிமன்றத்தால் வரலாற்று சிறப்பு மிக்கபிள்ளையார் ஆலயத்தை மீண்டும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஆடி அம்மாவாசை பிதுர் தர்ப்பணம் அந்த புனித நிலத்தில் இடம்பெற்றமை இன்றைய சிறப்பு ஆகும். 

அத்துடன் ஆலயம் அமைக்கும் திருப்பணிக்கு அடியார்களிடம் இருந்து ஒத்துழைப்பையும் நிதி உதவிகளையும் நாடி நிற்கின்றமையை" குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :