திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.பரமேஸ்வரன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.சிவதாசன் ஆகிய இருவரும் பதவியுர்வுடனான இடமாற்றம்



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.பரமேஸ்வரன் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கே.சிவதாசன் ஆகிய இருவரும் பதவியுர்வுடனான இடமாற்றம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இருவருக்கும் நினைவுச்சின்னம், நினைவுப்பரிசில்களும் அரசாங்க அதிபர் தலைமையிலான உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இருவரும் பொன்னாடை அணிவித்தும் கெளரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

1994 ஆம் ஆண்டு இலங்கை திட்டமிடல் சேவைக்கான திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவ்விரு உத்தியோகத்தர்களும் 27வருடங்கள் அர்ப்பணிப்புடனான சேவையை மாவட்ட மக்களுக்காக வழங்கியுள்ளனர்.

கே.பரமேஸ்வரன் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் கே.சிவதாசன் மகளிர் மற்றும் சிறுவர் அபவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமைளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :