கொரோனா தாக்கம் காணரமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறக்கின்றபோது, மாணவர்களை பாடசாலைக்குவரவழைத்தலில் பாடசாலைக்கல்விக்குழு மற்றும் கட்டாயக்கல்விக்குழுக்களுக்கான பங்களிப்பு தொடர்பாக கருத்தரங்குகள் நடைபெற்றுவருகின்றன.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில், அந்தந்த வலயக்கல்விப்பணிமனைகள் இக்கருத்தரங்குகளை சுகாதார நடைமுறைகளுக்கிணங்க நடாத்திவருகின்றன.
அந்தஅடிப்படையில்,சம்மாந்துறைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் வழிகாட்டலுக்கமைவாக, முறைசாராக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா இக்கருத்தரங்குகளை நடாத்திவருகிறார்.
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்குட்பட்ட நாவிதன்வெளி, சம்மாந்துறை மற்றும் இறக்காமக் கோட்டங்களிலுள்ள பாடசாலைகளின் கட்டாயக்கல்விக்குழுக்கான செயமலர்வுகள் நாவிதன்வnளி கணேசா வித்தியாலயததிலும் ,சம்மாந்தறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கடந்த இருதினங்களில் நடைபெற்றன.
ஆசிரியஆலோசகர்களான எ.அஹமட், எம்.ஜ.அகமட், எஸ்.பிரகதிஸ்வரன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னாள் முறைசாராக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.எ.றசூல் வளவாளராகக்கலந்துகொண்டு கருத்தரங்கு நடைபெற்றன.
அந்தந்த கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள் இக்கருத்தரங்குகளில் பங்குபற்றிவருகின்றனர்.

0 comments :
Post a Comment