அம்பாறையும் முடங்கியது: வீதிகள் வெறிச்சோடின!



வி.ரி.சகாதேவராஜா-
நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்பாரை மாவட்டமும் முடங்கியது.

பிரதானவீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக்காணப்பட்டன. பிரதேசங்கள் யாவும் வெறிச்சோடிக்காணப்பட்ட நிலையில் பாமசி மற்றும் சத்தோச நிலையங்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவை நிலையங்கள் மாத்திரம் திறந்துள்ளன.

காரைதீவு பிரதேச பிரதானவீதி வெறிச்சோடிக்காணப்பட்டது. அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருந்தன.
அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினர் வீதிச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள நிலையில் வெளியில் நடமாடுகின்றவர்களை பரிசோதனைக்குட்படுத்தி வருகின்றனர். உரிய காரணமின்றி நடமாடுகின்றவர்களை எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு அனுப்பியும் வருகின்றனர்.

இந்நிலையிலும் காரைதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு தொற்றிலிருந்து மீண்டு வர ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :