இன்றுமுதல் இரண்டாவது எஸ்ட்ரா செனிகா



J.f. காமிலா பேகம்-
7 லட்சத்திற்கும் அதிகமான அஸ்ட்ரா சேனிகா கொவிட் தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன.
கொவேக்ஸ் திட்டத்தின் ஊடாக, ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ், 728,460 தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

இந்நிலையில்அஸ்ட்ரா சேனிகா முதலாவது மருந்தளவை (DOSE) பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது மருந்தளவு இன்று முதல் செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

கொழும்பு − விஹாரமஹா தேவி பூங்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அஸ்ட்ரா சேனிகா இரண்டாவது மருந்தளவை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.
அத்துடன், விஹாரமஹா தேவி பூங்கா மற்றும் தியட்ட உயன ஆகிய இடங்களில் நாளை (02) அஸ்ட்ரா சேனிகா இரண்டாவது மருந்தளவை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :