த. அகிலன் திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு



திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 43 ஆவது தலைவராக  த. அகிலன் அவர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 01.08.2021 - ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது.

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் , கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.

செயலாளர் அருள் வரதராஜா 2020 - 2021 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை லிங்கநகர் ஸ்ரீ கோணலிங்கம் மகா வித்யாலயத்துக்கு ஒரு இரடடை மலசல கூடம் கையளிக்கப் பட்ட்து.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் திரு வ. கனகசிங்கம் – பல்கலைக்கழக வளாக தலைவர் – (ரெக்டர்) கலந்து கொண்டார். இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் புதிதாக தெரிவான தலைவர் திரு த. அகிலனுக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..

பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு வ. கனகசிங்கம் அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். மற்றும் திருகோணமலை மாவடட கல்வி நிலைமை வீழ்ச்சியுற்றுப்பதை புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூறி, அதை நல்ல முறையில் சீர் படுத்துவதட்கு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . அத்துடன் திருமலை வளாகத்தை எதிர்காலத்தில் தனிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுவதட்கு அனைவரும் இணைந்து செயல் பட முன்வரவேண்டும் என்று எடுத்துரைத்தார்

அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படட  கிருட்ணதாஸ் நன்றியுரையை நிகழ்த்தினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :