அனைத்து பள்ளிவாயல்கள் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் பள்வாயல்களில் கோவிட் 19 அவசர கட்டுப்பாடுகள் தொடர்பான இலங்கை வக்பு சபையின் அறிவித்தல்.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையிலான 2021.08.15 ஆம் திகதிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இலங்கை வக்ப் சபை பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

1. பள்ளிவாயல்களில் தனிமையாக தொழுவதற்கு மாத்திரம் எந்த நேரத்திலும் அதிகபட்சம் 25 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

2. ஐவேளை ஜமாஅத் தொழுகை , ஜும்ஆ தொழுகை , ஜனாஸா தொழுகை, அல்-குர்ஆன், நிகாஹ் மஜ்லிஸ்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் அனைத்து கூட்டு செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தல் வேண்டும்.
3. ஏனைய அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் விதிமுறைகள் மற்றும் வக்ப் சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாக பின்பற்றப்படல் வேண்டும்.

4. அதனடிப்படையில் முகக்கவசம் அணிதல் ஒரு மீட்டர் இடைவெளி பேணுதல் சொந்த தொழுகை விரிப்பை எடுத்துச் செல்லல் மற்றும் வீட்டிலிருந்து வுழூ செய்து கொண்டு செல்வது போன்றன கட்டாயமாகும்.

5. பள்ளிவாயல்களில் வுழூ செய்யும் பகுதிகள் மற்றும் கழிப்பறைகள் மூடப்படல் வேண்டும்.
6. தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

7. மேற்கூறிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பது சாத்தியமற்றது அல்லது இயலாதது எனக் கருதினால், பள்ளிவாயல்களை முற்றாக மூடி வைத்திருக்க பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்படி விடயங்களை இலங்கை வக்ப் சபையின் பணிப்புரைக்கமைய.முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் தரும நம்பிக்கை பொறுப்புகள் அல்லது வக்புகள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமதின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :