கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் பொத்துவில், கல்முனை வடக்கு, அக்கரைப்பற்று, நாவிதன்வெளி, திருக்கோவில், நிந்தவூர் ஆகிய பிரதேசங்கள் மிக முக்கியமான அவதான வலையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பிராந்தியத்தில் வாழும் மக்கள் வெளியில் செல்லாமல் மிகவும் இறுக்கமான முறையில் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.
இரண்டாவது தடுப்பூசி இன்னும் ஏற்றுவதற்குரிய கால அவகாசம் உள்ளதால் எதிர்வரும் ஆறு வாரங்கள் மிக முக்கியமான காலமாக கருதப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இரண்டாவது தடுப்பூசி ஏற்றியதன் பின்னர் தான் ஓரளவுக்கு கொவிட்-19 தாக்கத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்றார்.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் ஒரு பகுதியை கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மாற்றப்பட்டுள்ளது. இச் சிகிச்சை நிலையம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இச் சிகிச்சை நிலையம் அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலையுடன் இணைந்ததாக செய்யற்படுமெனவும் தெரிவித்தார்
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சேவைகள் வழமை போன்று அவ் வைத்தியசாலையிலேயே நடைபெறுமென்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment