12 மரணங்களுடன் நிந்தவூர் ஆபத்தான நிலையில் : மக்களுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ள சுகாதார அதிகாரி டாக்டர் பறூசா !



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் குறித்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில் நிந்தவூர் பிரதேசத்திலும் இந்நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதுவரை மொத்த தொற்றாளர்கள் 481 பேர் நிந்தவூரில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 12 மரணங்களும் பதிவாகியுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், தொற்றாளர்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு வரக்கூடிய அபாய நிலைமை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. எனவே இனிமேலாவது நாம் அனைவரும் எமது அலட்சியப்போக்கினை விடுத்து அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் சுகாதார விதிமுறைகளுடன் வெளியில் நடமாடுவதன் மூலமும் ஏனைய நேரங்களில் வீட்டிலிருந்து பாதுகாப்பு பெறுவதன்மூலமும் கொடிய கொரோனா மரண அபாயத்திலிருந்து எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதுடன் ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வதால் மாத்திரமே கொரோனா தொற்றை இல்லாதொழிக்கமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :